6751. தாக்கவே யூசரத்தை
கொள்ளும்போது தகமையுள்ள வனாகதத்தை யெட்டிவாங்கு
நோக்கமுடன் கேசரத்தை
கொண்டாயானால் நுணுக்கமுடன் கலைவகுத்து பிரிக்கலாகும்
ஆக்கமுடன் விசுத்தியிலே
இருந்துகொண்டு ஆண்மையுடன் சுழுத்தியிலே மேலேபாய்ந்து
சாக்கரதை சொற்பனமும்
வஸ்தையற்று சட்டமுடன் இருப்பதுவே சமாதிதானே
விளக்கவுரை :
6752. தானான சமாதியிலே
நின்றுகொண்டு சட்டமுடன் யோகமதுகொள்ளும்போது
கஓனான குருநிலையை கைநிலையாய்
குவலயத்தில் நடப்பவனே யோகவானாம்
தேனான தேஜொளிவின்
மயத்தைக்கண்டு தேற்றமுடன் சொக்கியல்லோ போகாமற்றான்
பானான பரஞ்சுரைப் பற்றியல்லோ
பரவெளியில் சமாதிவழி சாதிப்பாயே
விளக்கவுரை :
[ads-post]
6753. சாதிக்க முச்சுடரை
யறியலாகும் சட்டமுடன் நிஷ்டானுபூதிகொண்டு
ஆதியந்தக் கருவிகர
முளவாராய்ந்து வஷ்டாங்க யோகநிலை தன்னிற்சென்று
நீதியுடன் மாயவலை
சிக்கறுத்து நிஷ்களங்கமான சுபாநிலையிற்சென்று
சோதியெனும் உட்பொருளை
மனதிலுன்னி சுந்தரனே கமலமென்ற பீடந்தாக்கே
விளக்கவுரை :
6754. தாக்கையிலே கேசரத்தில்
நின்றுகொண்டு தகமையுள்ள பூரணத்தைப் போற்றிச்செய்து
நோக்கமுடன் கும்பத்தின்
மேலிருந்து நொடிக்குள்ளே சுவாதிஷ்டானந்தெரிந்து
வாக்குடனே மனோலயத்தை
யுச்சரித்து வளமுடனே யஷ்டநிலை பதியிற்சென்று
தூக்கமெனும் இருட்கடலை
விட்டகற்றி துய்யகருணானந்தங் கருவிபூணே
விளக்கவுரை :
6755. பூணவே கருவியென்றால்
ஞானப்பாலை புகழான பவக்கடலை விட்டகற்றி
தோணவே சின்மயத்தை மனதிலுன்னி
தோறாத கடுஞ்சினத்தை சிக்கறுத்து
வேணபடி முச்சுடரைப்
பற்றியல்லோ வேதாந்த மனோன்மணியைத் துதித்துநின்று
நீணவே வைராக்கிய கியானமூட்டி
நிஷ்களங்கமானதொரு நிலையில்நில்லே
விளக்கவுரை :