போகர் சப்தகாண்டம் 6696 - 6700 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6696 - 6700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6696. தங்கமாம் சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாரணியில் நாதாக்கள் மெச்சுந்தங்கம்
புங்கசித்திக் குகந்ததொரு யோகத்தங்கம் புகழான சமுசாரிக்கான தங்கம்
வங்கமதற் கசையாத வலுத்ததங்கம் வளம்பெரிய சித்துமுனி போற்றுந்தங்கம்
இங்கிதமாம் மாண்பர்களுக்குகந்த தங்கம் எழிலான நடராஜ தங்கம்பாரே

விளக்கவுரை :


6697. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே யின்னமொரு போக்குசொல்வேன்
நேரேதான் செம்பதுவும் களஞ்சிநூறு நேர்மையுடன் குகைதனிலே இட்டுமைந்தா
தீரேதான் பாகமது பிசகிடாமல் தீர்க்கமுடன் தானுருக்கி மருந்தையீவாய்
கூரேதான் காரமது விட்டுருக்கி கொற்றவனே குருவொன்று கொடுத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

6698. கொடுத்தவுடன் செம்பதுவும் உருகியல்லோ கோவேந்தர் புலிப்பாணி மன்னாகேளு
அடுத்தவிஷஞ் செம்பினது வூரலேகி வப்பனே மாற்றதுவும் சொல்லப்போமோ
தடுத்திட வர்ணமது என்னசொல்வேன் தாரணியில் நாதாக்கள் மறைத்தகூத்து
நடுப்படையில் வில்லுக்கு நாணுமற்று நானிலத்தில் விழுந்ததொரு கதையைப்போலாச்சே

விளக்கவுரை :


6699. கதையான செம்பதுவும் மாற்றோமெத்த காசினியில் ஆரறிவார் மகிமைதன்னை
சதையாமல் வாரடித்துப் புடத்தைப்போடு சட்டமுடன் தங்கமது என்னசொல்வேன்
உடையாது புடத்துக்கு வசைந்திடாது வுத்தமனே வங்கமதுக் குறந்திடாது
பதையாமல் வாரடித்துப் புடந்தான்போட பாங்குபெற செம்பொன்னின் மகிமைபாரே

விளக்கவுரை :


6700. பாரேதான் கவசகுண்டலத்துக்காதி பாங்குபெற சிவயோகிக்குகந்ததங்கம்
நேரேதான் வருமை வருங்காலந்தன்னில் நேர்மையுடன் உண்பதற்கு சொன்னநீதி
ஆரோதான் சொல்லார்கள் இந்தப்போக்கு வப்பனே யாமுனக்கு வுரைத்தேனப்பா
சீரேதான் நெடுங்காலந் தவமிருந்து சிற்பரனே வேதைமுகஞ் செய்துபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar