போகர் சப்தகாண்டம் 6371 - 6375 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6371 - 6375 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6371. கேளேதான் சரக்கெல்லா மரைத்தபின்பு கெவனமுடன் பில்லையது லேசதாக
நாளேதான் போகாமல் ரவியில்வைத்து நயமான புதுக்கலசந் தன்னிலப்பா
கோளேதான் நேராமல் மைந்தாநீயும் குமுறவே தானடைத்துச் சீலைசெய்து
கீளேதான் கலசமது துவாரமிட்டு கிருபையுடன் தயிலமது இறக்கிடாயே

விளக்கவுரை :


6372. இறக்கியே குழித்தயில மாகவல்லோ யெழிலான கலசமதில் வடிதான்கொண்டு
சிறக்கவே முப்பூவுங் களஞ்சிசேர்த்து சிறப்புடனே கலசமதில் பதனம்பண்ணி
திரமான தயிலமதை யாரேனுந்தான் தீர்க்கமுடன் சொல்லவில்லை நூல்கள்தன்னில்
உறமான தயிலமது சித்துதானும் ஓகோகோ நாதாக்கள் சொல்வாரன்றே

விளக்கவுரை :

[ads-post]

6373. அன்றான தயிலமதை யாராய்ந்தேதான் அவனிதனில் மாண்பர்களும் பிழைக்கவென்று
குன்றான வழிபாடு முறைபாடெல்லாம் கூறினேன் போகரேழாயிரத்தில் 
தென்றிசையில் பொதிகைமலை தன்னில்வாழும் தெளிவான சித்துமுனி நாதர்தாமும்
வென்றிடவே தயிலமதை மறைத்துவைத்தார் வேதாந்த நுட்பொருளை காட்டார்தானே

விளக்கவுரை :


6374. தானான சாத்திரத்தின் உளவுகண்டு தண்மையுள்ள கருவிகரணாதியெல்லாம்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் தயிலமதை வாங்கிமைந்தா
பானான பரிதியென்ற சூதந்தன்னில் பாங்குபெற தயிலமதை களஞ்சிநீட்டே

விளக்கவுரை :


6375. நீட்டவே பத்துக்கு ஒன்றுமேதான் நீதியுள்ள மதவானை யடங்கிநிற்க 
வாட்டமுடன் தயிலமதை யிரண்டுசாமம் வாகுபெற தானரைக்க சூதமாகும்
தாட்டிகமாய் சூதமதை செந்தூரிக்க தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
நாட்டமுடன் தாரமென்ற நாதந்தானும் நலமான களஞ்சியது ஒன்றுசேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar