போகர் சப்தகாண்டம் 6606 - 6610 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6606 - 6610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6606. ஓதினேன் செந்தூரந் தனையெடுத்து வுத்தமனே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீதியுடன் தானுருக்கிக் குருவொன்றீய நிஷ்களங்கமானதொரு வெள்ளிதானும்
ஆதியென்ற பஞ்சபூதசரக்கிலே வப்பனே வர்ணமது மிகவேயாகி
பாதிமதி சடையணிந்த தம்பிரானால் பலிக்குமடா வாதவித்தை ஜொலிக்கும்பாரே

விளக்கவுரை :


6607. ஜொலிக்குமே மாற்றதுவும் என்னசொல்வேன் சோராமல் வயதுபன்னிரண்டதாகும்
ஒலிக்குமே தங்கமதை என்னசொல்வேன் ஓகோகோ சித்துமுனி அறியாத்தங்கம்
பலிக்குமே சிவயோக மாண்பருக்கு பாவியென்மாண்பருக்கு பலியாதப்பா
எலித்தலையில் கோடாரித்தான் விழுந்தாற்போல எளிதான கைமுறைகள் வினோதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

6608. தானான சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாக்கான சிவயோகிச் செய்யுந்தங்கம்
கோனான காலாங்கிநாதர்சொன்ன குருவான வாக்கதுவும் பொய்யாதப்பா 
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் பலவிதமாய் நூலைப்பாடி
மானான மாண்பர்களும் அறியாமற்றான் மயக்கமுடன் மருட்கடலில் மழுந்திட்டாரே

விளக்கவுரை :


6609. மருட்டான சிடிகையென்ற வேதைதன்னை மார்க்கமுடன் அறியாமல் மாண்பர்தாமும்
இருட்டுவழி யேகியல்லோ பாலரெல்லாம் எழிலான கைமுறையை பாராமற்றான்
பொருளிருக்கு மிடமதுவும் தோன்றாவண்ணம் பொங்கமுடன் மதியீன மயக்கத்தாலே
குருட்டுவிழிப் பூனையது விட்டம்பாய்ந்த குறிப்பான கதைபோலே மேவலாச்சே

விளக்கவுரை :


6610. மேவலா மின்னமொரு மேன்மைகேளு மேதினியில் கீர்த்திபெற்ற புண்ணியவானே
ஆவலுடன் உந்தமக்கு மனதுவந்து வப்பனே காலாங்கிப் பதம்பணிந்து  
சாவதுவும் என்றைக்கும் நிட்சயந்தான் சாங்கமுடன் பலதொழிலும் கற்றுமென்ன
போவது மெய்யல்லால் இருப்பதில்லை பொங்கமுடன் வையகத்து வாழ்க்கையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar