6671. புகலவே புலிப்பாணி மன்னாகேளு
புகழான பூரணமென்ற வேதைதன்னை
சகலமுனி
சித்துகளுஞ்சொன்னாரப்பா தாரணியில் மர்மமதாய் சொல்லிவிட்டார்
நிகலவே சாத்திரங்கள்
கோடாகோடி நீதியுடன் கட்டுமுறை யனேகங்கண்டார்
அகலமுள்ள இரும்பென்ற
பாண்டந்தன்னை வப்பனே வெண்மையதாய் துலக்கிப்போடே
விளக்கவுரை :
6672. போடவேதான் பூரமென்ற
சரக்குதன்னை பொங்கமுடன் அயச்சட்டி தன்னிலிட்டு
நீடவே பலமொன்றாய்
நிறுத்திக்கொண்டு நிஷ்களங்கமான வெள்ளாட்டுப்பாலால்
சாடவே சுறுக்கதுவும்
எட்டுசாமம் தண்மையுடன் தான்கொடுத்து பின்னுங்கேளு
கூடவே பசுவின்பால் நாலுசாமம்
கொற்றவனே தான்கொடுத்து எடுத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
6673. எடுக்கவே பூரமது
என்னசொல்வேன் எழிலான தந்தமது போலேகாணும்
ஒடுக்கமதாய் இருகியல்லோ
யிறுகிக்காட்டும் வுத்தமனே தவளைநிறம்போலேகாணும்
தொடுக்கவே வெடியுப்பு
பலமொன்றாகும் தோறாமல் சீனமது பலமொன்றாகும்
விடுத்ததொரு துருசதுவும்
பலமொன்றாகும் வித்தகனே சிங்கியது பலமொன்றாமே
விளக்கவுரை :
6674. ஒன்றான சரக்கெல்லாம் கல்வமிட்டு வுத்தமனே நாதாக்கள் சொன்னவண்ணம்
தென்றிடவே கல்வமதி
லிட்டுமைந்தா வேகமுள்ள வருக்கன்பால் தன்னாலாட்டி
குன்றான பூரமதுக்
கங்கிபூட்டி கூர்மையுடன் ரவிதனிலே காயப்போடு
நன்றான சீலையது ஏழுசெய்து
நலமுடனே எரிக்கும்வகை வரிசைகேளே
விளக்கவுரை :
6675. வரிசையாய் தளவாயாம்
பாண்டந்தன்னில் வகையுடனே பூமணலைக்கொட்டியேதான்
பரியான பூரமதை எடுத்துமைந்தா
பாங்குபெற மணலதனில் பொதிந்துமல்லோ
விரிவான மணலதனால் மேலுமூடி
மேலுமந்ப்பாண்டமிட்டு சில்லுசெய்து
துரிதமுடன் ரவிதனிலே
காயவைத்து துப்புரவாய் வாலுகையால் ஏற்றிடாயே
விளக்கவுரை :