6801. பாடலாய் மறைத்துவைத்த
சங்கையெல்லாம் பாரிலுள்ள மாண்பர்களுங் கண்டுகொள்வார்
தேடவே சாத்திரத்தை புனிதவானே
தேற்றமுடன் புலிப்பாணிக் குறுதிகூறி
ஆடவே யம்பலத்தில்
நல்லோர்தம்மை அறிவுடையோர் சிவயோக மாண்பருக்கு
கூடவே சாத்திரத்தை
தேர்ந்துமல்லோ குணமான வெகுபுத்தி கூறுவீரே
விளக்கவுரை :
6802. கூறுவீர் இதிகாச
புத்திசொல்லிகுவலயத்தில் ஆள்கண்டு பதமுங்கண்டு
தேறியதோர்
சிறுபாலரானாலுந்தான் தேற்றமுடன் புத்திமதி மிகவுரைத்து
மீறியே கட்டளைக்கு
மஞ்சிடாமல் மிக்கமனது வந்துமல்லோ மதிகங்கூறி
ஆறியே சினமதுவும் மிகவகற்றி
வப்பனே நூல்கொடுத்து பதனஞ்சொல்லே
விளக்கவுரை :
[ads-post]
6803. சொல்லவே புலிப்பாணிக்
குண்மைகூறி சோறாமல் மனத்திடமும் நன்றாய்சொல்லி
வெல்லவே வரவுக்குத் தக்கதாக
வேதாந்த சின்மயத்தை யோதச்சொல்லி
புல்லவே சாத்திரத்துக்
குறுதிசொல்லி புகழான சத்தியங்கள் வாங்கியேதான்
நல்லதொரு சாத்திரத்தைத்
தந்தீரானால் நலமாக இருக்குமென்று நவின்றிட்டாரே
விளக்கவுரை :
6804. நவின்றதொரு வாக்கதுவும்
பிசகாமற்றான் நாதாக்கள் சொல்லதற்கு இடையூறின்றி
குவின்றிடவே புலிப்பாணி புனிதவானே
குவலயத்தில் பத்தியுண்டாய் மாண்பர்கண்டு
தவின்றிடவே விதியாளி
குணமுங்கண்டு தக்கபடி நூலீய்ந்தால் தருமமாகும்
புவின்றிடவே யுந்தனது
மனதுபோலே பூதலத்தில் நடப்பதுவுங் கடாட்சந்தானே
விளக்கவுரை :
6805. தானான காலாங்கி நீதிபோலே
சட்டமுடன் போகரேழாயிரத்தை
கோனான வையகத்தில் யானும்பாடி
கொற்றவனே யுந்தனுக்கு உபதேசித்தேன்
தேனான சாத்திரத்தை
பாதுகாத்து தேசத்தில் கொடுப்பதுவும் உந்தன்பாரம்
பானான கருமிகட்கு
கொடுப்பாயானால் பாலகனே பாவம்வந்து எய்தும்பாரே
விளக்கவுரை :