6676. ஏற்றியே தீபமது என்னசொல்வேன்
எழிலான புலிப்பாணி புத்திவானே
போற்றியே வம்பாளின்
பதாம்புயத்தை பொங்கமுடன் தானெரிப்பாய் கமலம்போல
நீற்றவே பூரமது கட்டுவாகி
நீதியுடன் தவளம்போல் நிற்கும்பாரு
ஆற்றியே ஜாமமது நாலுமாகும்
வப்பனே தானெரித்து எடுத்திடாயே
விளக்கவுரை :
6677. எடுக்கவே கணபதியைப்
போற்றிசெய்து எழிலான பாண்டமது திறந்துபாரு
விடுத்ததொரு பூரமது
என்னசொல்வேன் விண்ணுலகு சந்திரன்போல் விளக்கமெத்த
தொடுத்ததொரு
பூரமதைத்தானெடுத்து சோராமல் கவசமதை நீக்கியேதான்
தடுத்திடா மருந்துவகை
யானுரைப்பேன் தற்பரனே சிற்பரனே சார்ந்துகேளே
விளக்கவுரை :
[ads-post]
6678. சார்ந்துமே பூரமதை
எடுத்துபாலா தண்மையுடன் பற்பமது செய்வதற்கு
ஓர்ந்துமே யீயமென்ற
செந்தூரத்தை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
தீர்ந்ததொரு செந்தூரந்
தனையெடுத்து தீர்க்கமுடன் பூரமதுக்கிடையே தூக்கி
ஆர்ந்துமே சிற்றண்டக்
கருவினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
6679. நாலான சாமமது வரைத்தபின்பு
நலமாகப் பூரமதுக் கங்கிபூட்டி
பாலான ரவிதனிலே காயப்போடு
பட்சமுடன் தானெடுத்து சீலைசெய்து
மாலான மண்மறைவிற்
புடத்தைப்போடு மகத்தான கோழியென்ற புடமேயாகும்
சூலான பூரமதுக்குள்ளிருந்து
சுந்தரனே சூதமது மடியும்பாரே
விளக்கவுரை :
6680. மடியுமே இப்படிதான்
பத்துமுறை போடு மார்க்கமுடன் ஈயமென்ற செந்தூரத்தால்
படிபடியாய் கருவிட்டு
ஆட்டிஆட்டி பாலகனே பூரமதுக் கங்கிபூட்டி
விடிந்தபின்பு ரவிதனிலே
காயவைத்து வித்தகனே சீலையது வலுவாய்ச் செய்து
முகந்தபின்பு முன்போலே
புடமும்போடு முனையான பதமாறி எடுக்கக்கேளே
விளக்கவுரை :