6441. வாழ்கவே யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
தாழ்கவே லவணமது இருபத்தைந்து
தப்பாமல் வகையொன்றுக் களஞ்சிவீதம்
மூழ்கவே குழிக்கல்லில்
தன்னைவிட்டு முனையான காடியென்ற நீராலப்பா
நீழ்கவே முன்சொன்ன
காடிதானும் முசியாமல் தானெடுத்து வரைத்திடாயே
விளக்கவுரை :
6442. அரைத்துமே நாற்சாம மானபின்பு வன்பாக பில்லையது லகுவாய்ச்செய்து
குறையாது ரவிதனிலே காயவைத்து
குணமாக சில்லிட்டுச் சீலைசெய்து
முறைதானும் பிசகாமல்
பின்னுமப்பா முசியாமல் கோழியென்ற புடந்தான்போடு
நிறைபோலே தீயாறி
யெடுத்துப்பாரு நிட்களங்கமானதொரு பற்பமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6443. ஆச்சப்பா லவணமதை
எடுத்துமைந்தா வப்பனே முன்போலே காடியாலே
மூச்சடங்கத் தானரைப்பாய்
நாலுசாமம் முசியாமல் முன்போலே சீலைசெய்து
மாச்சலுடன் ரவிதனிலே
காயவைத்து பாங்குபெற புடந்தனையே போடுபோடு
மாச்சலது வாராது லவணபற்பம்
மகத்தான நாதாக்கள் வித்தையாச்சே
விளக்கவுரை :
6444. வித்தையாம் லவணமென்ற
பற்பந்தன்னை வீறுடனே இரண்டுபத்து புடமேபோடு
சுத்தமுள்ள பற்பமது
என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
சத்தியமாய் யானறிந்த
மட்டுமல்லோ தண்மைபெற வுந்தனுக்கு வோதினேன்யான்
புத்தியுள்ள பூபாலா
புண்ணியவானே புகழுடனே செய்துகொண்டால் சித்திதானே
விளக்கவுரை :
6445. தானேகேள் புலிப்பாணி மகனேயப்பா
தண்மையுள்ள லவணவகை இருபத்தைந்து
மானேகேள் எந்தனது
நிகண்டிலப்பா மகத்தான வாயிரத்து எழுநூற்றுக்குள்
கோனான என்குருவின்
கடாட்சத்தாலே கொற்றவனே லவணவகை இருபத்தைந்தும்
மானான பேர்கண்டு
விடையுங்கண்டு மகத்தான யினங்கண்டு சேர்வைகாணே
விளக்கவுரை :