6951. தந்தாரே எந்தனுக்குக்
கோடியாக சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு
வதிதமார்க்கம் வப்பனே தாமுரைத்துப்போகவென்று
இந்தமானிலத்திலுள்ள
மகிமையெல்லாம் ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன்
சத்தகாண்டம் விண்ணுலகம் மண்ணுலகம் விடங்கொள்ளாதே
விளக்கவுரை :
6952. கொள்ளாது போகரேழாயிரந்தான்
கொற்றவனே நாதாக்கள்கூறவில்லை
எள்ளளவும் பிசகாது
இந்நூலப்பா யிணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி
சொன்னநூலாம் காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளளவுந் தான்போகாத
காண்டமப்பா தருவான பன்னீராயிரந்தானே
விளக்கவுரை :
[ads-post]
6953. பன்னீராயிரம் என்னும்
நூல்தானப்பா பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்னமொழி தவறாது துய்யபாலா
துகளகற்றி பன்னீராயிரந்தான் சொன்னார்
கன்னியமாய்ப் பன்னிரண்டு
காண்டஞ்சொன்னார் கண்மணியே வாயிரத்துக் கொரு காண்டந்தான்
உன்னிதமாய் இந்நூலுக்கு
உவமைகூறி வுத்தமனார் பாடிவைத்தார் உண்மைதானே
விளக்கவுரை :
6954. உண்மையாம் எந்நூலைக்
கண்டறிந்து வுத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு
காண்டம்பாரு தீர்க்கமுடன் ரகசியங்கள் எல்லாம்விள்ளும்
நன்மைபெற மோட்சவழி
கதியேகொள்வார் நாதாந்த கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான்
பெருநூலப்பா தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே
விளக்கவுரை :
6955. பாரேதான் அகஸ்தியனார்
கோடிநூல்கள் பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின்
மார்க்கமெல்லாம் நேர்மையுள்ள வென்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக
சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாஸ்திரங்கள்
பார்ப்பதுண்டோ பார்த்தாலும் பெருநூலுக் கொவ்வாதன்றே
விளக்கவுரை :