6926. தானான துவாபரமாம்
யுகத்திலப்பா தகமையுடன் பிரளயங்கள் வந்தபோது
கோனான திருவொற்றியூர்தானப்பா
கொற்றவனே கடலிலே நெடுந்தூரந்தான்
தேனான மாபுரமுங் கோபுரந்தான்
தோறாமல் பிரளயங்கள் வந்துமல்லோ
மானான தலமதுவும் மூழ்கியல்லோ
மன்னவனே சமுத்திரமும் மேவலாச்சே
விளக்கவுரை :
6927. மேவவென்றால் கோர்வையது
என்னசொல்வேன் மேன்மையுள்ள நாற்பத்தியெட்டேயாகும்
தாவுகடலலை யதுவுமிஞ்சியேதான்
சட்டமுடன் பூமியல்லோ முழுகலாச்சே
ஆவலுடன் குளிகைகொண்டு
சென்றேனப்பா வப்பனே திருப்புவனங் கண்டேன்யானும்
நாவதனில் கூறுதற்கு
நளினமில்லை நலமான தலமதுவும் மகிமையாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6928. ஆச்சப்பா கோர்வையது
என்னசொல்வேன் வப்பனே பதினெட்டு ரெண்டுபத்து
பாச்சலென்ற திருப்பழனி
தலமுமாகும் பாங்கான மகிமையது என்னசொல்வேன்
மாச்சலென்ற கோர்வையது
முப்பத்திரண்டு மகத்தான மண்டபமும் எட்டுநாலு
வீச்சுடனே குளிகைகொண்டு
பார்த்துவந்தேன் விதக்கவே புலிப்பாணி இன்னங்கேளே
விளக்கவுரை :
6929. கேளப்பா பிணிதீர்த்த
வைத்தியநாதர் கெடியான தலமென்ற தொன்றுவுண்டு
ஆளப்பா கோர்வையது என்னசொல்வேன்
வப்பனே பதினாறு திக்குநாலு
யாளப்பா திருப்பரமாங்
குன்றந்தானும் வளமையுள்ள கெடிஸ்தலமாம் அதற்குப்பேரு
சூளப்பா கோர்வையது
என்னசொல்வேன் துப்புறவாய் இருமூன்று சதரமெட்டே
விளக்கவுரை :
6930. எட்டான திருவாரூர்
என்னலாகும் எழிலான கோர்வையது என்னசொல்வேன்
சட்டமுடன் திருவாசல்
அறுபத்துநான்கு தகமையுள்ள கலையாறு சத்தமெட்டு
திட்டமுடன் திருவிடையா
மருதூரப்பா தேவதா தலமென்று செப்பலாகும்
வட்டமுடன் கோர்வையது
வன்பத்தாறு வப்பனே பரிசமது நாலுதானே
விளக்கவுரை :