போகர் சப்தகாண்டம் 6381 - 6385 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6381 - 6385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6381. ஒண்ணாது செந்தூரந் தானுமப்பா வுத்தமனே கோடிவரை யிருக்கலாகும்
கண்ணான செந்தூரந் தன்னையப்பா கருத்துடனே பாச்சுகின்ற விதத்தைக்கேளு
மண்ணான செம்பதுவும் களஞ்சிநூறு மகத்தான செந்தூரங் களஞ்சியொன்று
ஒண்ணாது தானுருக்கி மூசைதன்னில் வுத்தமனே தானெடுத்து சாய்த்திடாயே

விளக்கவுரை :


6382. சாய்க்கவே செம்பதுவும் மாற்றோபத்து தனியான மாற்றதுவும் என்னசொல்வேன்
வாய்ந்ததொரு பிறவியென்ற தங்கந்தானும் மகத்தான தங்கமது இதற்கீடுண்டோ
தேய்ந்ததொரு தேய்வுயென்ற தங்கமப்பா தேற்றமுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
பேய்ந்ததொரு மலைபோலே விளைந்த தங்கம் பெருமையுள்ள சிருஷ்டிப்பு தங்கந்தானே

விளக்கவுரை :

[ads-post]

6383. தானான தங்கமது யோகித்தங்கம் தண்மையுடன் சிவவேடம் பூண்டோர்க்காகும்
கோனான குருத்தங்கம் ஞானத்தங்கம் கொற்றவர்கள் ராஜாக்கள் அணியுந்தங்கம்
பானான மனோன்மணியாட் குகந்ததங்கம் பாரினிலே சித்தர்மெச்சும் தங்கமப்பா
தேனான குருக்கள் மாரணியுந்தங்கம் தேஜொளிவின் சொரூபமென்ற தங்கந்தானே

விளக்கவுரை :


6384. தங்கமா மின்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மகனேகேளு
பங்கமில்லா தங்கமது என்னசொல்வேன் பாலகனே ஒன்பதுக்கு ஒன்றுதாக்கு
துங்கமுள்ள ரசிதமது மாற்றோபத்து துடியான பசுமையென்ற யேமமாச்சு
புங்கசித்தி எட்டுடைய சிவயோகிக்கு புனிதனே தங்கமது வாய்க்கும்பாரே

விளக்கவுரை :


6385. பாரேதான் கருமிகட்கும் சண்டாளர்க்கும் பலியாது இவ்வேதை பலியாதப்பா
ஆரோதான் சாத்திரங்கள் அனேகஞ்சித்தர் அபரிதமாய்ப் பாடிவைத்தார் கோடாகோடி
நேரேதான் இவ்வேதைக் குவமைகூற நெடியபுகழ் வையகத்தில் ஆராலாகும்
சீரேதான் விட்டகுறை இருந்தபேர்க்கு தீர்க்கமுடன் வாய்ப்பதும் மெய்யதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar