போகர் சப்தகாண்டம் 6811 - 6815 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6811 - 6815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6811. இறங்கினார் நாற்பதுநாள் மண்டலந்தான் யெழிலான வாகாசந்தனிலிருந்து
சிறந்ததொரு வாசியைத்தான் நடத்தியல்லோ சிறப்புடனே வையகத்தோர் காணவென்று
பறந்துமே வையகத்தில் இறங்கியேதான் பாங்கான காலாங்கி சமாதிமுன்னே
இறந்ததொரு சவம்போலே விழுந்தாரல்லோ எழிலாக பூதநாத சித்துதானே

விளக்கவுரை :


6812. சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான காலாங்கி தம்மிடத்தில்
பத்தியுடன் அஞ்சலிகள் மிகவுஞ் செய்து பான்மையுடன் சிரங்குனிந்து கரங்குவித்து
முத்திபெற எந்தனுக்கு உபதேசங்கள் முனிவரே செய்யவென்று வடிபணிந்து
சத்தியமாய் எந்தனைத்தான் ஆதரிக்க சட்டமுடன் கடாட்சமது வருள்செய்வீரே

விளக்கவுரை :

[ads-post]

6813. அருளான வருளதுவும் பெற்றுமல்லோ வன்புடனே பூதானந்தசித்து
இருளான இருளகற்றி மையம்பூண்டு எழிலான சீனபதிவிட்டுமல்லோ
குருவான டமரகனாரந்தனாரை குறிப்புடனே காண்பதற்கு மனதிலெண்ணி
திருவான ஜோதிமயந்தன்னைக்காண தீர்க்கமுடன் தென்பொதிகை வந்திட்டாரே

விளக்கவுரை :


6814. வந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமான புலிப்பாணி யறிவுள்ளானே
இந்தமானிலத்தில் வெகுவதிசயங்கள் எழிலான சித்துமுனி கோடாகோடி
சுந்தரனார் காலாங்கிநாதர்பக்கல் துப்புரவாய் வந்தவர்கள் லக்கோயில்லை
விந்தைகளும் மிகச்செய்தார் ரிஷியார்தாமும் விண்ணுலகு கருவூரார் சித்துபாரே

விளக்கவுரை :


6815. பாரப்பா புலிப்பாணி பண்புள்ளானே பாலகனே எந்தனிரு மணியேகேண்மோ
ஆரப்பா வாகாயமண்டபத்தில் வப்பனே நட்சத்திர வளவுமட்டும்
நேரப்பா வாசியைத்தான் நடத்தியல்லோ நேர்மையுடன் ஆகாயஞ் சென்றாரில்லை
கூரப்பா கருவூரான் என்றசித்து கொற்றவனே வாகாயஞ் சென்றார்காணே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar