போகர் சப்தகாண்டம் 6896 - 6900 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6896 - 6900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6896. மதித்தாரே ராமரிஷிமுனியார்தம்மை மார்க்கமுடன் காலாங்கிநாதர்தேவர்
துதிப்புடனே ராமரிஷி யென்றுமேதான் துப்புரவாய் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
விதிப்படியே பட்டாபிஷேகமென்று விருப்பமுடன் தன்மனதில் உவந்துகொண்டு
நதிக்கரையைத் தான்தேடி தீர்த்தங்கொண்டு நமஸ்கார துதிகள் மிகசெய்திட்டாரே

விளக்கவுரை :


6897. செய்ததொரு காலாங்கி நாதர்தம்மை செங்கண்மால் ரிஷியாரும் மனங்களித்து
துய்யதொரு துலபமாம் மலைதன்னை துப்புரவாய் கையேந்தி முடிகள்சாய்ந்து
வெய்யபுகழ் உபதேசம் எந்தனுக்கு விருப்பமுடன் செய்யவென்று வினவிக்கேட்க
கைதவமாய் உபதேச உண்மைதன்னை கர்த்தாவும் எந்தனுக்கு கூறிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6898. கூறியே உபதேச உண்மைதன்னை குணமான காலாங்கி நாதருக்கு
தேறியதோர் கிரேதாயி னுகத்தில்தானும் தேற்றமுடன் தானடைந்த மகிமையெல்லாம்
ஆறிடவே காலாங்கி நாதருக்கு அங்ஙனவே உபதேசஞ் செய்தாரல்லோ
பீறியே காலாங்கி நாதர்தாமும் மிக்கவே சீனபதி சென்றிட்டாரே

விளக்கவுரை :


6899. சென்றுமே சிலகாலம் அங்கிருந்து செம்மலுடன் கிரேதாயினுகத்தில்தானும்
குன்றுமலை வணாந்திரங்கள் குகைகள்தேடி கூறான சித்துமுனி யனைத்துங்கண்டு
தென்றிசையில் கும்பமுனி மலையுங்கண்டு தேற்றமுடன் காலாங்கி மலையைக்காண
வென்றிடவே பிரளயங்கள் வந்தபோது மேன்மையுடன் மலைதனிலே இருந்திட்டாரே

விளக்கவுரை :


6900. இருந்தாரே இன்னமொரு இணக்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி புனிதவானே
திருந்தவே திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் காலாங்கி நாதர்தாமும்
அருந்தவசி பலராமரென்னுஞ்சித்து வம்மலையில் நெடுங்காலந் தவசிருக்க
குருந்தமெனும் மரக்கலப்பை தோளிலேந்தி குணமான ரிஷியாரின் தவங்கண்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar