6536. நிற்கவென்றால் உந்தமக்கு
எல்லாங்கிட்டும் நீதியுடன் சூதமென்ற குளிகைதன்னால்
அற்பமென்று நினையாதே
யருண்மைந்தாகேள் ஆகாகா விதியிருந்து கிட்டலாச்சு
சொற்பமெனும் கருமியென்ற
மாண்பர்தம்மை சுட்டறுத்து விட்டகற்றி துகளகற்றி
கற்புடைய மாயவலைச்
சிக்கறுத்து களங்கமில்லா சிவயோக தவத்தைப்போற்றே
விளக்கவுரை :
6537. போற்றியே சூதமென்ற
குளிகைதன்னை பொங்கமுடன் துவாரமிட்டு கயர்தான்மாட்டி
நாற்றிசையும் மெச்சுதற்கு
கண்டம்போல் நாயகனே கழுத்திலிட்டு வேடம்பூண்டு
ஆற்றவே நெடுந்தூரம்
நெடுந்தேசம் வப்பனே வயிரமாங் காதவோசை
ஏற்றமுடன் தானடக்க
வாசியோடும் எழிலான குளிகையது மகிமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
6538. பார்க்கவென்றால் அறுபத்து
நான்குசித்தும் பாருலகில் வெகுகூத்துவாடலாகும்
தீர்க்கமுடன் ஆவினது
முதுகில்வைத்தால் திறமான பசுவதுவும் பால்கொடாது
ஏர்க்கவே குளிகையது
வேகத்தாலே யெளிதான பாலதுவும் மேலேநோக்கும்
ஆர்க்கமுடன் மணியதுவை
எடுத்தாலல்லோ வப்பனே பாலதுவுங் கறக்கும்பாரே
விளக்கவுரை :
6539. கறக்குகின்ற ஆவதுவும்
பால்கொடாது காசினியில் இதுவுமொரு சித்துவாகும்
திறமுடைய குளிகைதனை
யெடுத்துமைந்தா தீர்க்கமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
உறமுடனே நெடுங்காலமிருந்துகொண்டு
வுத்தமனே சிவயோகஞ் சாதித்தேதான்
நிறமதுவும் மாறாமல்
சதாகாலந்தான் நீட்சியுடன் சமாதிமுகம் நின்றிடாயே
விளக்கவுரை :
6540. நிற்கவே விதியிருந்த
புண்ணியத்தால் நிலமையுள்ள குளிகையது கிடைக்கலாச்சு
அற்பமென்ற பொருளெல்லா
மாண்பாகேளு வப்பனே யுந்தனுக்குக் கிடைக்கலாச்சு
விற்பிடித்த மன்னவரும்
நன்றமைத்து விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்
உற்பனமாங் குளிகையது
வாய்க்கலாச்சு ஓகோகோ நாதாக்கள் கடாட்சந்தானே
விளக்கவுரை :