போகர் சப்தகாண்டம் 6691 - 6695 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6691 - 6695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6691. கடந்தேனே சீனபதி நீங்கியல்லோ காலாங்கி நாதருட கிருபையாலும்
சுடர்போன்ற மனோன்மணியாள் கடாட்சத்தாலும் சுந்தரனே யஷ்டதிசை துடர்ந்துவந்தேன்
திடமான முறைபாடு வழிபாடெல்லாம் தீர்க்கமுடன் குணபாடு தெரிந்துமேதான்
சட்டமுடன் காயாதி கற்பங்கொண்டு தாரணியில் நெடுங்கால மிருந்திட்டேனே

விளக்கவுரை :


6692. இருந்தேனே நெடுங்காலங் குளிகைகொண்டு எழிலான சமாதிமுகம் எல்லாங்கண்டு
பொருந்தவே யுந்தமக்கு உபதேசங்கள் பொங்கமுடன் கொட்டிவைத்தேன் இடங்கொள்ளாது
திருந்தவே பூரமென்ற காயகற்பம் திட்டமுடன் குன்றிவீதங் கொண்டாயானால்
அருந்தியதோர் தேகமது ஜோதிமின்னும் வப்பனே பூரமதின் வேகந்தானே

விளக்கவுரை :

[ads-post]

6693. தானான குருசொன்ன வாக்குபோலே சட்டமுடன் மண்டலந்தான் உண்பாயானால்
பானான தேகமது என்னசொல்வேன் பரிதிகண்ட பனிபோலே நோய்கள்தீர்ந்து
தேனான மேனியது காந்திவீசும் தேசமதில் விதியாளி யறிவான்பாரு
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் உந்தமக்கு வமைக்கலாச்சே

விளக்கவுரை :


6694. அமைப்பான பூரமதை எடுத்துமைந்தா வப்பனே மதிதனிலே நூற்றுக்கொன்று
நிமைப்பொழுதும் காலமது வீண்போகாமல் நீதியுள்ள புலிப்பாணி புனிதவானே
சுவைதாங்கும் நளியாளர் குறைதீர்த்தாப்போல சுந்தரனே சிடிகையென்ற வேதைதன்னை
அமைப்புடனே மதிதானும் உருகும்போது வப்பனே பூரமது ஒன்றுதாக்கே

விளக்கவுரை :


6695. தாக்கியே வுருக்குமுகந் தன்னிலப்பா தகமையுடன் வெள்ளிதனை யெடுத்துப்பாரு
ஆக்கியோன் வாக்கதுவும் பொய்யாதப்பா வப்பனே வெள்ளியது என்னசொல்வேன்
பாக்கியமுண்டாவதற்கு பசுமையாகி பாங்குடனே பத்தரையா மாற்றுமாகும்
வாக்கதுவும் பொய்யாது மைந்தாகேளு வண்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar