போகர் சப்தகாண்டம் 6761 - 6765 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6761 - 6765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6761. உண்ணவே தேகமெனும் கோட்டைதன்னில் வுத்தமனே உட்கோட்டை யேழுகோட்டை
நண்ணவே துவாரமது வொன்பதாகும் நலமான பஞ்சேந்திர மைந்துமாகும்
திண்ணவே யுடல்பொருளாவியந்தம் தீர்க்கமுள்ள ஏழுசுற்று கோட்டைக்குள்ளே
வண்ணமுடன் கலையதுதான் முப்பத்திரண்டு வளமான இடைகலையின் கலைதான்ரெண்டே

விளக்கவுரை :


6762. இரண்டான கலைக்குள்ளே முப்பத்திரண்டு எழிலான கலையதுவும் இதிலடக்கம்
திரண்டுமே ரேசகபூரகத்தைப்பற்றி தெளிவான கும்பகமும் இதிலடக்கம்
கரண்டகம்போல் ஆசாகாசக பாடமாகும் கருவிகரணாதியந்தம் இதிலடக்கம்
வரண்டதொரு மேல்வீடு மோட்சவீடு வளம்பெரிய வாகாய கோட்டையாமே 

விளக்கவுரை :

[ads-post]

6763. கோட்டையாங் கபாலமென்ற கோட்டையப்பா கொடிதான சின்மயத்தின் கோட்டையாகும்
பாட்டையுடன் வாசலது யதிலேயுண்டு பாலகனே சின்மயத்தின் வாசலப்பா
தேட்டையெனும் வமுர்தமப்பா வுமிழ்நீர்தேட்டை தேஜொளிவின் பம்பரம்போல் சுரக்குந்தேட்டை
காட்டையது கண்டாலுங் காணலாம்பார் காயாபுரி கோட்டையின்தன் கருகாணாரே

விளக்கவுரை :


6764. காணாரே பஞ்சேந்திர கோட்டைதன்னை கருவான தடங்களது காணமாட்டார்
தோணாரே வாசலது தடங்கண்டாலும் தோறாமல் சின்மயத்தின் வழியறிந்து
வீணாளைப்போக்காமல் விட்டில்போலே வியாபித்துக் குருவயர்ந்து விழலாய்ப்போனார்
ஊணாமல் பரஞ்சுடரை தனலென்றெண்ணி யுத்தமனே பாதைவழி தெரியார்காணே

விளக்கவுரை :


6765. தானான வட்சரத்தை யோதமாட்டார் தண்மையுள்ள குருட்டு வழிதன்னில்சென்று
தேனான மடாலயத்தை வீடென்றெண்ணி தேற்றமுடன் கிருஷ்ணாவதாரனப்பா
பானான கீதையிலே யுபதேசித்த பற்குணனார் உபதேசம்போலேயப்பா
மானான பத்மபீடம் பெற்றேனென்று மார்க்கமுடன் தாமுரைத்து கெட்டார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar