போகர் சப்தகாண்டம் 6946 - 6950 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6946 - 6950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6946. நவின்றாரே சித்துமுனி கோடாகோடி நாற்பத்து எட்டுலட்ச கிரந்தந்தன்னை
குவின்றதொரு சாத்திரங்கள் மலைபோலாக குணமுடனே பாடிவைத்தார் லக்கோயில்லை
கவிந்ததொரு குறுக்குவழி சுறுக்குமார்க்கம் கண்டுமனது வந்தல்லோ வுளவாராய்ந்து
அவிந்ததொரு விளக்கதனை ஏற்றினார்போல் வப்பனே சத்தகாண்டம் பாடினேனே  

விளக்கவுரை :


6947. பாடினேன் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே நீதியுடன் நெடுங்கால மிருந்தேனங்கே
தேடியே காலாங்கிநாதர்தாமும் தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீஷன்
நாடியே வெண்டுமென்று நன்மையாலே நானவற்கு நற்சீஷனாகினேனே

விளக்கவுரை :

[ads-post]

6948. ஆகினேனே நெடுங்காலம் பணிதிசெய்து வப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல பரிதவித்தேன் பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமது காயந்தந்து சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோபதேசஞ்சொல்லி மேன்மையுடன் எந்தனை யாசீர்மித்தாரே

விளக்கவுரை :


6949. எந்தனையும் ஆசீர்மம் மிகவுஞ்செய்து எழிலான வுபதேச வுண்மைகூறி 
அந்தமுடன் ஆதியந்த முடிவுஞ்சொல்லி வப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமைகூறி விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் எந்நாளும் சீஷனாக்கி சுந்தரனே மகத்துவங்கள் கூறினாரே

விளக்கவுரை :


6950. கூறினார் வெகுகோடி இதிகாசங்கல் கொற்றவனே சமாதிமுறை பாடுஞ்சொல்லி
தேறியே சிலகாலம் அங்கிருந்து தேற்றமுடன் வையகத்து வதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு மிக்கான நாடுபதி தேசமெல்லாம் 
கோறியே தேசமெல்லாம் மகிதம்பூண்டு கொற்றவனே எந்தனுக்கு வருள்தந்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar