போகர் சப்தகாண்டம் 6556 - 6560 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6556 - 6560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6556. வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தத் தாயினுட மகிமையாலே
தீதொன்றும் வாராமல் ரவியின்மார்க்கம் தீர்க்கமுடன் சொல்லுகிறேன் திறமாய்க்கேளு
போதமுடன் சீனமென்ற படிகக்கல்லாம் பொங்கமுடன் சேரதுவும் நிறுத்திமைந்தா
வாதமதில் மேலான வைடூரியந்தான் வளமான வச்சிமாங் கல்லின்போக்கே

விளக்கவுரை :


6557. போக்கான படிகமென்ற கல்தானப்பா பொங்கமுடன் வச்சிரமாங் குகையிலிட்டு
வாக்கதுவும் பொய்யாமல் வசனிப்பேன்யான் வளமான மாந்தளிரும் உருக்குப்பச்சை
நோக்கமுடன் சேரதுவும் கால்தானொன்று நுட்பமுடன் பூநீருக் கிடமொன்றாக
ஆக்கமுடன் காக்கையென்ற நிமிளையப்பா அடவான சேரதுவுங் கால்தானொன்றே

விளக்கவுரை :

[ads-post]

6558. காலான குடோரியென்ற காரஞ்சேர்ந்து கருவாக மூசையிட்டு வுருக்கும்போது
பாலான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூடி பாகுபதம் போலுருக்கி தண்விட்டாடும்
மாலான வயிரமதுபோலே தோன்றும் மகத்தான நிமிளையென்ற வேதைதன்னால்
சூலான கெற்பமது வுள்ளேதோன்றி சுக்கிரன்போல் சரணைவெளி காணலாமே

விளக்கவுரை :


6559. காணலாம் ரவையென்ற கல்லுமாச்சு கருவான தவளம்போலே இருக்கும்பாரு
பூணலாம் சரணையிட்டு வொளியேகொண்டால் புகழான சுக்கிரன்போல் பூர்க்கும்பாரு
தோணவே வேணமட்டும் குகைதானிட்டு தோறாமல் முன்சொன்ன கணக்குபோலே
வேணபடி கணக்கெடுத்து வுருக்கிப்பாரு வெகுகோடி நிதியனைத்தும் காண்பாய்பாரே

விளக்கவுரை :


6560. பாரப்பா மூசையிட்டு வுருகும்போது பாலகனே சிறுமணியாங் கருவமைத்து
நேரப்பா வுருக்கியதை சாய்ப்பாயானால் நெடிதான ஜெகஜோதி என்னசொல்வேன்
சீரப்பா யிதற்கீடு ரத்னமுண்டோ சீருலகில் வெகுமாண்பர் தெரியாமற்றான்
ஆரப்பா முறையோடும் வழிபாடோடும் வப்பனே தாமுரைத்தார் அதிகவானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar