6826. பகரவென்று சுந்தரானந்தர்கேட்ட பாருலகில் இதிகாச மகிமைகண்டு
நிகரமுடன் இவர்தமக்கு
உபதேசங்கள் நீதியுடன் கூர்வதற்கு மனங்களித்து
உகரமென்ற வட்சரத்தை
யுபதேசித்து வுத்தமனார் சுந்தரானந்தருக்கு
ககரமுடன் யரகமுதல்
வுயிர்களெல்லாம் கருவான வட்சரத்தை யோதினாரே
விளக்கவுரை :
6827. ஓதவே யஞ்சலிகள்
மிகவும்பெற்று வுத்தமனார் சீனபதிகண்டுமல்லோ
நீதமுடன் விடையதுவும்
பெற்றுமல்லோ நிலையான தம்பதிக்கு யேகினார்காண்
சேதமது வாராமல் சித்துதானும்
ஜெகதலத்தில் நெடுங்கால மிருந்தாரல்லோ
தோதமுள்ள சித்தாதி
சித்தரெல்லாம் தோறாமல் என்குருவைக் கண்டிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
6828. கண்டாரே யின்னமொரு
கருமானங்கேள் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
அண்டரண்ட தேசமெல்லாஞ்
சுற்றிவந்தேன் வப்பனே பாஷாண விளைவுகண்டேன்
துண்டரிகமானதொரு
விளைவுமார்க்கம் துப்புரவாய் யான்கண்டு விடமுங்கண்டேன்
சண்டமாருதம்போலே
விளைவுகண்டேன் தண்மையுள்ள பாஷாண விளைவுகேளே
விளக்கவுரை :
6829. கேளப்பா கருமாவின்
விளைவுமார்க்கம் கெடியான டில்லிக்கு மேற்கேயப்பா
ஆளப்பா பூமியெல்லாம் சுருமாவாகும்
வப்பனே நீலாஞ்சனக்கல்லுதானும்
கேளப்பா வாராது அஞ்சனங்கள்
கொற்றவனே சுருமாவின் கீழ்மட்டந்தான்
கீளப்பா வஞ்சனமாம் பாறையல்லோ
கெடியான கல்லினுட பூமியாமே
விளக்கவுரை :
6830. பூமியாம் டில்லிக்கு
கிழக்கேயப்பா புகழான கெந்தகத்தின் பூமியாகும்
சாமியது கிருபையினால்
விளையுங் கெந்தம் சதுரான சித்தர்களுக்குகந்த கெந்தி
வாமிசிவகாமியம்மாள்
வீற்றிருக்கும் வளமான சிவப்பு கெந்தியங்கேயுண்டு
நாமிகவே குளிகைகொண்டு
சென்றேனப்பா நலமான டில்லிக்குக் கிழக்கேதானே
விளக்கவுரை :