போகர் சப்தகாண்டம் 6756 - 6760 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6756 - 6760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6756. நில்லப்பா பசுபதியாம் பாசந்தன்னை நினைவான மவுனமென்ற நிலையிற்பூட்டி
வல்லதொரு பிரகாச நிலையில்நின்று வளம்பெறவே சூக்குமத்தின் வேரறுத்து
புல்லவே பாஷாந்திர பேதாபேதம் புகழான கருவிகரணாதியந்தம்
நல்லதொரு சிவானந்த நிலையைப்பற்றி நாட்டமுடன் மனதுவந்து நவிலக்கேளே

விளக்கவுரை :


6757. நவிலவே சிதாபாச வலையகற்றி நலமுடனே பௌஷிகத்தின் வேரறுத்து
நவிலவே கற்பாந்திர காலமட்டும் கருத்துடனே சச்சிதா நிலையைப்பற்றி
புவிலவே யருட்கடலை காண்பதற்கு புகழான இருட்கடலை விட்டகற்றி
நவிலவே வித்தியாரண்ணியத்தை விருப்பமுடன் கூறுகிறேன் உண்மைபாரே

விளக்கவுரை :

[ads-post]

6758. பாரேதான் சன்னியாசி வர்த்தங்கொண்டு பாங்கான கலையகற்றி நிலையைப்பற்றி
சேரேதான் சிவானந்த லாகிரியாலே செம்மலுடன் குருசம்பிரதாயவர்க்கம்
நீரேதான் கற்றறிந்து நிலையில்நின்று நிட்சிதமாம் பொருளதனை விட்டகற்றி
கூரேதான் சசிவர்ணசுயரூபத்தை குணமுடனே யோதுகிறேன் இன்னந்தானே

விளக்கவுரை :


6759. தானான மனக்குரங்கை விட்டகற்றி தண்மையுள்ள இதிகாசப்பொருளறிந்து
தேனான வமுர்தமெனு மட்சீரபாத்திரம் தெகிட்டாத தெள்ளமுர்த ஞானப்பாலை
மானான மதியமுர்தம் கொண்டாற்போல மதகரியா மாணுவத்தை யொடுக்கிநின்று
பானான பத்மமெனும் யுகாந்தப்போரை பற்றறுத்து விட்டறுத்து பதிவாய்நில்லே

விளக்கவுரை :


6760. நிற்கையிலே ஜோதிமயம் தன்னிற்றோற்றும் நீதியுள்ள பாடுதுறை வழிதான்காட்டும்
அற்பமென்று நினையாதே அடிவணங்கி அம்பரத்தின் மேலிருந்து அறிவாலுன்னி
சொற்பமதாய் வாசியதை கீழ்நோக்காமல் சோராமல் மனந்தளர்ந்து சூட்சமேகி
உற்பனமாய் உமிநீரை வழலையாக்கி வுத்தமனே நாள்தோறும் அமுர்தமுண்ணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar