போகர் சப்தகாண்டம் 6386 - 6390 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6386 - 6390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6386. மெய்யான வித்தையது என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் கூறும்வித்தை
பொய்யான வித்தையது யனேகங்கோடி பூட்டினார் வெகுகோடி மாண்பர்க்காக
வையகத்தில் வாழுகின்ற மாண்பருக்கு மகத்தான செந்தூரம் வுண்டபேர்க்கு
ஐயமற ரோகாதி ரோகமெல்லாம் வப்பனே வுடலைவிட்டே யேகும்பாரே

விளக்கவுரை :


6387. ஏகுமே யின்னமொரு கற்பம்பாரு யேற்றமுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
பாருடைய நெய்போன்ற விலாங்குதன்னை பட்சமுடன் தான்பிடித்து பண்பாய்க்கேளு
சாகுதற்கு முன்பாக சூலந்தன்னை சட்டமுடன் வாயிலிட்டு விலாங்குதன்னை
வேகுதற்கு பாண்டமது தானமைத்து வேகமுடன் பூநீரைப் பாண்டம்போடே

விளக்கவுரை :

[ads-post]

6388. போட்டுமே விலாங்குதனை மேலே வைத்து பொங்கமுடன் மேலுமந்த பூநீர்விட்டு
நாட்டமுடன் ஜலமதனை மேலே விட்டு நிஷ்களங்க மாகவல்லோ பாண்டமூடி
வாட்டமுடன் தானவித்து ரவியிற்போடு வளமான விலாங்கதுவும் வுலர்ந்தபின்பு
தாட்டிகமாய் கல்லுரலில் இட்டுமைந்தா சட்டமுடன் இரும்புலக்கை தன்னாற்சாடே

விளக்கவுரை :


6389. சாடவே சூரணமாய்ச் செய்துகொண்டு சட்டமுடன் சுக்குடனே ஓமஞ்சேர்த்து
கூடவே மிளகுடனே வாய்விளங்கம் குணமான பரங்கியென்ற பட்டைதானும்
போடவே யேலமுடன் ஜாதிபத்திரி பொங்கமுடன் வெந்தயமும் இருசீரந்தான்
சூடவே பச்சையென்ற பூரந்தானும் சுத்தமுள்ள ரோசனையுங் கூடச்சேரே

விளக்கவுரை :


6390. சேர்த்துமே வகைக்குவொரு பலமதாக சிறப்புடனே நெய்தேனும் விட்டுக்கிண்டி
பேர்த்துமே புதுக்கலசந் தன்னிலப்பா பெருமையுடன் சீனிசர்க்கரையுங்கூட்டி
ஆர்க்கவே பாகுபதந் தன்னிலப்பா வப்பனே முன்னுரைத்த லேகியத்தை
தீர்க்கமுடன் தான்சேர்த்து கிளறிவாங்கி திட்டமுடன் பீங்கானிற் பதனம்பண்ணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar