போகர் சப்தகாண்டம் 6721 - 6725 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6721 - 6725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6721. உண்டான காலமது ஒடுக்கந்தன்னில் வுத்தமனே தாகமென்ற கருவுதன்னில்
கொண்டிடவே வீரமென்ற குளிகைதன்னை கொற்றவனே தானிழைத்து நாவில்தீட்ட
தண்டமுடன் செத்தசவம் போலானாலும் தாரணியில் தலையெடுத்து வார்த்தைகூறும்
சண்டமாருதம்போல இந்தவீரம் சட்டமுடன் உந்தனுக்கு ஓதினேனே

விளக்கவுரை :


6722. ஓதவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ஒளித்தமார்க்கம்
நீதமுடன் காயகற்ப சூரணந்தான் நிலையான யோகிகட்கும் மாண்பருக்கும்
தோடமுடன் சரக்குவகை செப்பக்கேளும் தோன்றாமல் சுக்குடனே மிளகுமாகும்
ஆதமுடன் திப்பிலியும் கடுக்காய்த்தான்றி வப்பனே மாசிக்காய் தானுங்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

6723. கூட்டவே தேசரவம் வாய்விளங்கம் குணமான கார்போகங் கடுக்காய்ப்பூவும்
நாட்டமுடன் சிற்றரத்தை பேரத்தை நலமான வாலுளுவை யோமந்தானும்
வாட்டமுடன் சிறுமல்லி பேராமல்லி வளமான குராசுரளி யோமந்தானும்
கோஷ்டமுடன் கட்டதிப்பிலியுங்கூட்டி குணமான அதிமதுரம் மேலந்தானே

விளக்கவுரை :


6724. தானான கிராம்புடனே லவங்கப்பட்டை தண்மையுள்ள ஜாதிக்காய் ஜாதிபத்திரி
கோனான தக்கோலம் பிறப்பின்மூலம் கோடிதான பூமிசர்க்கரையுமாகும்
தேனான பரங்கியுட பட்டைதானும் தெளிவான வால்மிளகு செங்கடுக்காய்
பானான துளசியென்ற வித்துதானும் பாங்கான ஆலினது வித்துங்கூட்டே

விளக்கவுரை :


6725. வித்தான அரசினது வித்துமாகும் வீரான யிச்சினுட வித்துமாகும்
சுத்தமுள்ள பூனையென்ற காலிதானும் சுந்தரனே ஊமத்தை வித்துங்கூட்டு
மெத்தவரிதான விராலிவித்து மேன்மையுள்ள பூவரசன் வித்துகூட்டு
சத்தநதிக் கப்பாலே விளையும்வித்து சந்தனமாம் வித்ததுவும் கூடச்சேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar