போகர் சப்தகாண்டம் 6856 - 6860 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6856 - 6860 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6856. செப்பவென்றால் கருநாகப் பழரசத்தால் செம்மலுடன் தானரைப்பாய் நாலுசாமம்
ஒப்பமுடன் முப்பூவுங் களஞ்சிசேர்த்து வுத்தமனே தானரைத்து பில்லைதட்டி
தப்பிதங்கள் வாராமல் ரவியில்வைத்து சட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
மெய்ப்புடனே கோழியென்ற புடந்தான்போடு மேலான செந்தூர மாகுந்தானே

விளக்கவுரை :


6857. தானான செந்தூரந் தனையெடுத்து தண்மையுடன் முன்போல கல்வமிட்டு
தேனான கருநாக பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பானான பில்லையது லகுவாய்ச் செய்து பாலகனே ரவிமுகத்தில் காயப்போடு
மானான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் முன்போல புடத்தைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

6858. போடேதான் பத்துமுறை இப்படியேபோடு பொங்கமுடன் அயமதுவும் செந்தூரந்தான்
நாடேதான் முறைபோலே செய்வாயானால் நலமான செந்தூரம் வேதையாகும்
கூடேதான் ஆவின்பால் வெண்ணைதன்னில் குணமுடனே நெல்லிடைதான் கொண்டாயானால்
தேடேதான் காலாங்கி கடாட்சத்தாலே தெளிவாக தேகமது மின்னும்பாரே

விளக்கவுரை :


6859. பாரேதான் மண்டலந்தான் கொண்டபோது பாங்கான தேகமது சட்டைதள்ளும்
நேரேதான் தேகமது வண்டுபோலாம் நெடிதான வாசியது மேல்நோக்காது
கூரேதான் தேகமது கற்றூணாகும் கொற்றவனே யமனுக்கு நாளுமில்லை
வேரேதான் கற்பமது வேண்டுமோதான் வித்தகனே வயத்தினுட மகிமைகாணே

விளக்கவுரை :


6860. காணவே யின்னமொரு மகிமைசொல்வேன் கருவான புலிப்பாணி கணிதவானே
தோணவே வெள்ளியது களஞ்சிபத்து தோறாமல் தானுருக்கி மருந்தொன்றீய
மாணவே வெள்ளியது பழுக்கும்பாரு மகத்தான மாற்றதுவும் என்னசொல்வேன்
வேணபடி வங்கமதை கொடுத்தேயூது வேட்கையுடன் வர்ணமது யேகாதன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar