6921. பாரேதான் கோணமது நவகோணந்தான்
பாங்கான கும்பமென்ற கோணமப்பா
நேரேதான் தேவதா தலமுமாகும்
நெடிதான கோர்வையது என்னசொல்வேன்
கூரேதான் கலையாறு
ருசிகையெட்டு குணமான தேவுதா தலமுமாகும்
நீரேதான் வகுத்தறிய
யின்னஞ்சொல்வேன் நிஷ்களங்க மாயவர்தலமுமாமே
விளக்கவுரை :
6922. தலமான தேவதா தலமுமாகும்
தாக்கான கோர்வையது என்னசொல்வேன்
பிலமான கோயிலது
முப்பத்திரண்டு பேரான மண்டபந்தான் அறுபத்துநான்கு
வலமான பாஞ்சால தேசமப்பா
வளமான தேவதா தலமுமாகும்
நலமான கோர்வையது
என்னசொல்வேன் நாட்டிலே நவில்வதற்கு நாவில்லைதானே
விளக்கவுரை :
[ads-post]
6923. நாவில்லைப்பா வில்லையென்ன
சொல்வேன் நன்மையுள்ள வறுபத்துநாலுசத்தம்
காவிலா நேபாள தேசமப்பா
கருவான தேவதா தலமுமாகும்
பூவிலுயர் கோர்வையது
யென்னசொல்வேன் புகழான சத்தமது பரிசமெட்டு
தாவுபுகழ் ஆவுடையார்
தலமுமாகும் தகமையுள்ள கோர்வையது சொல்லக்கேளே
விளக்கவுரை :
6924. சொல்லவென்றால் நாற்பத்தி
யாறேயாகும் சுத்தமுள்ள சத்தமது நாலேயாகும்
வெல்லவே பழனிமகாதலமுமாகும்
வேதாந்த தலத்தினது கோர்வைசொல்வேன்
புல்லவே சதுரெட்டு
திசைகள்நான்கு புகழான கோணமது வறுபத்துநான்கு
வெல்லவே கழுக்குன்ற
பதிதானப்பா மேன்மையுள்ள தலமென்று செப்பலாமே
விளக்கவுரை :
6925. செப்பவென்றால் கோர்வையது என்னசொல்வேன் ஜெகதலத்தில் யாராலும் சொல்லப்போமோ
ஒப்பமுடன் இருபத்து
நாலுமாகும் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
எப்படியும் ஈரைந்தாய்ப்
பதினாறாக எழிலான மண்டபமும் கூறலாகும்
தப்பிதங்கள் இல்லாமல்
தயவுள்ளானே சாற்றுகிறேன் திருவொற்றியூரைத்தானே
விளக்கவுரை :