போகர் சப்தகாண்டம் 6771 - 6775 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6771 - 6775 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6771. வேதையாமின்னமொரு பாகஞ்சொல்வேன் வேதாந்த தாயினது கிருபையாலே
பாதையாம் சமுசாரிக்கான வித்தை பாலகனே யுந்தமக்கு பகருவேன்யான்
சீதையெனும் பெண்ணாகி மாதுபூண்ட ஜெகஜோதி தங்கமதை யென்னசொல்வேன்
சூதகற்றி மயக்கறுத்து சுட்டிடாமல் சுந்தரனே சிடிகையென்ற வேதைகேளே

விளக்கவுரை :


6772. கேளேதான் துருசதுவும் சேர்தானெட்டு கெடியான தாரமது சேர்தானொன்று
பாளேதான்போகாமல் கல்வமிட்டு பாலகனே தானரைப்பாய் நாலுசாமம்
நீளேதான் செருப்படையில் நாலுசாமம் நிலையான நுணாமூலி நாலுசாமம்
கீளேதான் வேரோடிப் படர்ந்திருக்கும் கெடியான கும்மட்டி மூலிவாங்கே

விளக்கவுரை :

[ads-post]

6773. வாங்கியே தானரைப்பாய் நாலுசாமம் வளமுடனே மாத்திரையாய் செய்துகொண்டு
தூங்கியே திரியாதே துய்யபாலா துப்புரவாய் மாத்திரையைப் பீங்கானிட்டு
ஓங்கியே வெள்ளாட்டுக் கோமியந்தான் உத்தமனே மண்டலந்தான் ஊறப்போடு
சாங்கமுடன் மண்டலந்தான் சென்றபின்பு சட்டமுடன் மாத்திரைதான் எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


6774. கொள்ளவே மாத்திரைகள் பதனம்பண்ணு கோவேந்தர் புலிப்பாணி பனிதவானே
விள்ளவே வெள்ளியது பலந்தான்ரெண்டு விருப்பமுடன் மாத்திரைதான் பலந்தான்பத்து
எள்ளளவும் பிசகதுவும் நேராமற்றான் எழிலான வெள்ளிதனை மூசையிட்டு
உள்ளபடி வெள்ளியது வுருகும்போது வுத்தமனே மாத்திரைதான் துலமும்போடே

விளக்கவுரை :


6775. போடேதான் மாத்திரைதான் உருகியல்லோ பொங்கமுடன் தானிறக்கி வைத்துமல்லோ
நாடேதான் மற்றாநாள் பின்னுமப்பா நலமுடனே மூசைதனை யுருகிக்கொண்டு
நீடேதான் பின்னுமந்த மூசைதன்னில் நிலையான மாத்திரையை துலந்தானீவாய்
கூடேதான் மூசைதனை இறக்கிவைத்து குணமாக மற்றாநாள் உருக்கிக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar