போகர் சப்தகாண்டம் 6376 - 6380 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6376 - 6380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6376. சேர்த்துமே முன்சொன்ன தயிலத்தாலே செவ்வையாய்த் தானரைப்பாய் நாலுசாமம்
நேர்த்தியாய் மெழுகுபத மாகுமட்டும் நேர்மையுடன் தானரைத்து செப்பக்கேளிர்
ஊத்துவமாய்க் குப்பிக்குச் சீலைசெய்து வுத்தமனே சரக்கதனைக் குப்பியிட்டு
தீர்த்தமென்ற குப்பிக்கு மாக்கல்லாக திறமாக மேல்மூடி சீலைசெய்யே

விளக்கவுரை :


6377. செய்யவே தளவாயாஞ் சட்டிதன்னில் சிறப்புடனே மணலதனைக் கொண்டுவந்து
பையவே தளவாயாஞ் சட்டிதன்னில் பாங்குடனே ரவியில் நாலுவுயரம்போடு
துய்யநல்ல குப்பிதன்னை மண்மேடிட்டு துப்புரவாய்க் குப்பிவாய் தெரியமூடி
எய்யவே மேற்பாண்டந் தன்னில்மூடி வுத்தமனே சீலையது வலுவாய்ச் செய்யே

விளக்கவுரை :

[ads-post]

6378. வலுவான சீலையது செய்தபின்பு மைந்தனே மயங்காமல் செய்வாயப்பா
மெலுவான வாலுகையாம் ஏந்திரத்தில் மேன்மையுடன் தானெறிப்பாய் நாலுசாமம்
சுலுவான தீபமது கமலம்போலாம் சுந்தரனே தானெறிப்பாய் செப்பக்கேளு
உலுவான தீபமது யாறியபின் உத்தமனே தானெடுக்க வகையைக்ககேளே 

விளக்கவுரை :


6379. கேளப்பா கணபதிக்குப் பூசைசெய்து கெட்டியாய் மனோன்மணியை மனதிலுன்னி
நாளப்பா போகாமல் செந்தூரத்தை நலமாக சீசாவிற் பதனம்பண்ணு
பாளப்பா போகாமல் தேகந்தன்னை பட்சமுடன் நெடுங்காலமிருப்பதற்கு
வேளப்பா காயாதி கற்பங்கொள்ள விருப்பமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே

விளக்கவுரை :


6380. பண்பான செந்தூரங் குன்றிவீதம் பாலகனே மண்டலந்தான் இரண்டுவேளை
நண்பான தேனதினில் கொண்டாயானால் நலமான தேகமது கற்றூணாகும்
திண்பான வாசியது மேல்நோக்காது தீர்க்கமுடன் கொண்டவர்க்கு நரையுமில்லை
உண்டான காயாதி கற்பமெல்லாம் உத்தமனே யிதற்கீடு சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar