போகர் சப்தகாண்டம் 6636 - 6640 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6636 - 6640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6636. பொய்யாது நவலோகஞ் செந்தூரந்தான் பூட்டுகிறேன் நாலாயிரத்துச்சொச்சம்
மெய்யிலுள்ள ரோகமது யெல்லாந்தீரும் மேலான நவலோக செந்தூரந்தான்
வையகங்கள் தான்புகழும் செந்தூரத்தை வளம்பெரிய நாதாக்கள் மறைத்துவைத்தார்
துய்யநல்ல பண்டிதங்கள் மிகவாராய்ந்து துப்புரவாய் ஓதிவைத்தேன் நுணுக்கம்பாரே

விளக்கவுரை :


6637. பாரேதான் நவலோக செந்தூரத்தை பாருலகில் நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஆரோதான் சாஸ்திரங்கள் உளவாராய்ந்து வப்பனே போதிப்பார் யாருமில்லை
நேரேதான் வுந்தன்முகம் மனதுவந்து நெடிதான முறைபாடு வழிபாடெல்லாம்
தீரேதான் இடைபாகங் கைபாகங்கள் தீர்க்கமுடன் உந்தனுக்கு போதித்தேனே

விளக்கவுரை :

[ads-post]

6638. போதித்தேன் இன்னமொரு மார்க்கங்கேளிர் பொங்கமுடன் புலிப்பாணி புனிதவானே
ஆதித்தன் சந்திரன்போல் வெள்ளிபோக்கு வப்பனே யானுரைப்பேன் அன்புள்ளோனே
நீதியுடன் சூதமது பலந்தானொன்று நிஷ்களங்கமானதொரு காடிவீரம்
தீதில்லாப் பாஷாணஞ் சுன்னமொன்று தீர்க்கமுடன் களஞ்சியிடை தானுந்தூக்கே

விளக்கவுரை :


6639. தூக்கியே கல்வமதி லிட்டுமைந்தா துப்புறவாய் ஆறுவகை செயநீர்தன்னால் 
நோக்கமுடன் தானரைப்பாய் இரண்டுசாமம் நுணுக்கமுடன் மெழுகதனை யுருட்டிமைந்தா
வாக்குடனே பாகமது பிசகிடாமல் வளமான சூதமென்ற வெண்ணைதன்னை
பாக்களவாயுருட்டியதை மூசையிட்டு பண்புபெற சில்லிட்டுச் சீலைசெய்யே
விளக்கவுரை :


6640. சீலையென்றால் ஏழுசீலை வலுவாய்ச்செய்து திட்டமுடன் சரவுலையில் வைத்துவூது
வாலையுடன் தீயாறி யெடுத்துப்பாரு வளமான சூதமது வெள்ளியாகும்
காலையிலே தானுதிக்குஞ் சூரியன்போல் கருவான வெள்ளியது ஜோதிமெத்த
ஆலையெனும் தகடதனை இறுத்திமைந்தா வப்பனே புடம்போடத் துலக்கமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar