6706. செப்பவென்றால் இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் செயலான வீரமது தானெடுத்து
ஒப்பமுடன் மிருதாரு
சிங்கிதன்னை ஓகோகோ நாதாக்கள் மறைப்புநீக்கி
தப்பிதங்கள் வாராமல்
சிங்கிதன்னை சட்டமுடன் வெண்கருவால் தானரைத்து
மெய்ப்புடனே வீரமதற்
கங்கிபூட்டி மேன்மையுடன் ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
6707. காய்ந்தபின்பு சீலையது
வலுவாய்ச்செய்து கவனமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
தேய்ந்ததொரு வீரமது
கட்டுமாகி தேற்றமுடன் படிகமென்ற கல்லுபோலாம்
மாய்ந்ததொரு வீரமதைத்
தானெடுத்து மறுபடியும் முன்போல பாகஞ்செய்து
பாய்ந்ததொரு மண்மறைவிற்
புடந்தான்பத்து பாலகனே போட்டுவரக் கட்டிப்போமே
விளக்கவுரை :
[ads-post]
6708. கட்டியதோர் வீரமதைத்
தானெடுத்து கலங்காமல் சீலையது விலக்கியல்லோ
திட்டமுடன் பின்னுமொரு
பாகஞ்சொல்வேன் தீர்க்கமுள்ள புலிப்பாணி புகலக்கேளிர்
எட்டியென்ற வித்ததுவும்
பலந்தானைந்து எழிலாக நிம்பழத்தின் சாற்றினாலே
கொட்டியதோர் விஷந்தனைத் தானரைத்து
கூறவே வீரமதற்கங்கிபூட்டே
விளக்கவுரை :
6709. அங்கியென்ற வீரமதை
ரவியில்வைத்து வப்பனே ஏழுசீலை வலுவாய்ச்செய்து
இங்கிதமாய் மண்மறைவிற்
புடத்தைப்போடு எழிலான புடமாறி எடுத்துப்பாரு
சங்கையில்லா வீரமது
என்னசொல்வேன் சட்டமுடன் மணிபோலே இறுகிநிற்கும்
வங்கமென்ற மணிபோலே
தோற்றும்பாரு வளமையுள்ள வீரமணியாகுந்தானே
விளக்கவுரை :
6710. தானான வீரமணி என்னசொல்வேன் தாக்கான புடமதுவும் முன்போலாக
கோனான புடமதுவும் தூறுபோடு
கொற்றவனே வீரமணி என்னசொல்வேன்
மானான வீரமணி கட்டினாக்கால்
மதகரியிலேறுதற்கு ஐயமுண்டோ
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேஜொளியில் வீரமணி காணலாமே
விளக்கவுரை :