போகர் சப்தகாண்டம் 6596 - 6600 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6596 - 6600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6596. செப்புவேன் கெந்தியது சேர்தான்பாதி செயலான வீரமது சேர்தான்பாதி
ஒப்பமுடன் லிங்கமது சேர்தானொன்று வுத்தமனே சாரமது சேர்தானொன்று
மெய்ப்புடனே பூரமது சேர்தானொன்று மேன்மையுடன் கல்வமதி லிட்டுமைந்தா
எப்படியும் ஓரைந்தா யட்சபூதம் எழிலான சரக்கெல்லாம் பொடியாய்ப்போச்சே

விளக்கவுரை :


6597. பொடியான சரக்கெல்லாம் மையதாகி பொங்கமுடன் தாகமது கருவிட்டாட்டி
கன்னமாஞ் சரக்கெல்லாம் நன்றாயாட்டி கண்மணியே ஜாலமெட்டுந் தீர்ந்தபின்பு
வடிவான பஞ்சரச சரக்கையெல்லாம் வளம்பெறவே பில்லையது லகுவாய்த்தட்டி
மிடியோக வோட்டிலிட்டுச் சீலைசெய்து மீட்சிபெற ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

6598. போடவே ரவியாறிக் காய்ந்தபின்பு பொங்கமுடன் மணல்மறைவிற் புடத்தைப்போடு
நாடவே இப்படியே பத்துமுறைபோடு நலமான தாகமென்ற கருவினாலே
சாடவே புடமதுவும் பத்துந் தீர்ந்தால் சட்டமுடன் மறுபடியுஞ் செப்பக்கேளு
கூடவே சரக்கதனைக் கல்வமிட்டு கொற்றவனே கையானின் ரசச்தைதாக்கே

விளக்கவுரை :


6599. தாக்கவே நாற்சாமம் அரைத்தபின்பு சட்டமுடன் பில்லையது லகுவாய்ச்செய்து
ஆக்கமுடன் ரவிதனிலே காயவைத்து வப்பனே சில்லிட்டுச் சீலைசெய்து 
போக்கான சரக்கெல்லாங் கட்டுதற்கு பொங்கமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
வாக்கதுவும் பொய்யாமல் கோழியாக வளமுடனே புடம்போடக் கட்டும்பாரே

விளக்கவுரை :


6600. கட்டுமே பஞ்சரசச் சரக்குதானும் கருவாக பத்துமுறை இப்படியே போட்டால்
சட்டமுடன் சரக்கதுவுங் கட்டிப்போகும் சார்பான செந்தூரம் நீலவர்ணம்
மட்டுமே சிவப்பதுவும் ஏராதப்பா மார்க்கமுடன் பின்னும்வகை செப்பக்கேளு
பட்டுப்போல் செந்தூரஞ் சிவப்பதற்கு பாலகனே வரிசையது செப்புவேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar