போகர் சப்தகாண்டம் 6426 - 6430 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6426 - 6430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6426. கேட்கவே போகரிஷி முனிவர்தானும் கெடியான லோகாதிதேசமெல்லாம்
மீட்கமுடன் குளிகைகொண்டு சுத்திவந்தேன் மிக்கான பதிதனையே காணவென்று
வாட்டமுடன் தெரிசனைக்கு வந்தேன்யானும் வளமான காலாங்கி கடாட்சத்தாலே
தேட்டமுடன் எந்தனுக்கு தெரிசனைத்தான் தேவனே கிடைத்துதென்று பணிந்திட்டாரே

விளக்கவுரை :


6427. பணிந்தாரே போகரிஷிநாதர்தாமும் பாங்கான செம்புரவி யாதுகூறும்   
துணிவுடனே குளிகைபூண்டு யிங்கேவந்து துய்யதொரு சிறுபாலா வுந்தனுக்கு
மணியான வுபதேசஞ் செய்வேனென்று மார்க்கமுடன் செம்புரவி கூறியல்லோ
பணிபோன்ற செம்புரவி மாலையொன்று பட்சமுடன் தான்கொடுத்து மதிக்கலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6428. மதிக்கவே நவரத்தின மாலையொன்றும் மன்னவனார் போகரிஷி நாதருக்கு
துதிக்கவே நெடுங்கால மிருப்பதற்கும் துடியான கற்பமென்ற மார்க்கந்தானும்
நதிராகத் தான்கொடுத்து அசுவந்தானும் நயம்பெறவே கருவுவளவானதெல்லாம்
கதிர்போன்ற போகரிஷிநாதருக்கு கனமாகத் தான்கொடுத்து கருதலாச்சே

விளக்கவுரை :


6429. கருதவே காலாங்கி நாதர்தம்மை கனமுடனே கேட்டதொரு புண்ணியத்தால்
பொருந்தவே போகமுனி நாதருக்கு பொங்கமுடன் உபதேசஞ் செய்யவெண்ணி
அருமையுடன் மூலிகற்பமானதெல்லாம் வன்புடனே கொண்டுபோய் மனதுவந்து
பெருமைபெற சதாகாலம் வையகத்தில் பேரான மகிமைதனை கூறும்பாரே

விளக்கவுரை :


6430. பாரேதான் போகரிஷி நாதாகேளும் பாருலகில் வந்ததொரு குளிகைபாலா
சீருடைய சித்தாதி முனிவர்தாமும் சீரான கானகத்தில் அனேகருண்டு
வீறுபுகழ் நாதாக்கள் சபிப்பாரப்பா வித்தகனே யுந்தமக்குத் தீங்குநேரும்
மாறுபாடானதொரு வார்த்தைகூறி மன்னவனே மதிமோசஞ் செய்வார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar