போகர் சப்தகாண்டம் 6791 - 6795 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6791 - 6795 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6791. தங்கமாமின்னமொரு வயனஞ்சொல்வோம் தண்மையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே
இங்கிதமாய் யெந்தனையும் சித்தர்கூடி எழிலான விண்ணப்ப வருந்தல்தன்னை
சங்கமென்ற சபையாறு மனதுவந்து சட்டமுடன் எந்தனையும் கேள்விகேட்க
வந்தனமாய்ச் சொன்னதொரு வளம்பாடெல்லாம் வண்மையுடன் உந்தனுக்கு ஓதுவேனே

விளக்கவுரை :


6792. ஓதவே எந்தனையும் சித்தர்கூடி ஓகோகோ நாதாக்கள் கூட்டத்தோடும்
நீதமுடன் எந்தனையும் வரவழைத்து நீதியுடன் முறைபாடு வழிபாடெல்லாம்
தோதகமாய் கட்டுரைத்தார் கோடாகோடி தேறாமல் யானுமல்லோ விடைகள் சொன்னேன்
போதனைகள் மிகவுரைத்தாத் இறங்கியல்லோ பொங்கமுடன் யானுமல்லோ விடைதந்தேனே

விளக்கவுரை :

[ads-post]

6793. தந்தேனே விடையதுவும் என்னவென்றால் தகமையுள்ள ரிஷிகூட்ட முனிவரெல்லாம்
சொந்தமுடன் வாதாடி யுறவுகொண்டு சோராமல் எந்தனுக்கு யிதவுகூறி
வந்தனங்கள் மிகச்செய்து வஞ்சலித்து வளம்பெரிய காலாங்கி நாதசீஷா
இந்தவரை நெடுங்காலம் கோடிகாலம் இகபரமும் கண்டறிந்த சித்துபாரே

விளக்கவுரை :


6794. பாரேதான் வையகத்தின் மகிமையெல்லாம் பட்சமுடன் காலாங்கிநாதர்தாமும்
சீரேதான் உந்தமக்கு உபதேசங்கள் செய்துவைத்த படியாலே தோஷமில்லை
நீரேதான் குளிகையது பூண்டுகொண்டு நீடாழி யுலகமெலாஞ் சுற்றிவந்து
கூரேதான் மகிமையெல்லாம் அறிந்துகொண்டீர் கொற்றவனார் காலாங்கி கடாட்சந்தானே

விளக்கவுரை :


6795. தானான மகிமையெல்லாம் அறிந்தாலுந்தான் தாரணியில் ஒருபோதும் தோஷமில்லை
தோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலே
தேனான சாத்திரத்தின் முறைபாடெல்லாம் தெளிவுடனே சிக்கருத்து சத்தகாண்டம்
பானான சூரியன்போல் ஏழாயிரந்தான் பாடிவைத்தீர் சீனபதிபாண்பருக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar