போகர் சப்தகாண்டம் 6586 - 6590 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6586 - 6590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6586. பாரேதான் கண்ணோய்தான் தொண்ணூற்றாறும் பாங்கான பிடரிநோய் ஜன்னிபதிமூன்றும்
நேரேதான் அண்டமென்ற வாதம்போகும் நெடிதான பாதத்தின் வீக்கம்போகும்
கூரேதான் குறிப்புற்று கன்னப்புற்று குடிகெடுக்கும் ராசனென்ற பிளவையோடும்
சேரேதான் முதுவாளை விலாவின்வாளை செயலான தமர்க்காய்ச் சிலந்திகாணே

விளக்கவுரை :


6587. காணவே யிடிவிழுந்து புரைமேற்புண்ணும் கண்ணோசை சதைவளர்த்தி ரோகந்தானும்
தோணவே கபவாதம் ரத்தவாதம் தோற்றாத கைமுடக்கு கால்முடக்கு
வேணதொரு நாவரட்சி சந்திடுப்பு வீரான கீலினது வாய்வுபோகும்
தோணவே கரம்புவலி முடிச்சிபோகும் கோளான மலக்குற்றம் போகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6588. போகுமே அனுபானம் கண்டறிந்து போக்கவே வியாதிகளுக்குகந்தவண்ணம்
ஏகுமே கைபாகஞ் செய்பாகந்தான் யெழிலான புடபாகம் ருசிபாகந்தான்
ஆகுமே இத்தனையுங் கண்டறிந்து வப்பனே நூல்வழியே சென்றாயானால்
பாகுபதங் கால்வழிதான் காணலாகும் பாங்கான நாதாக்கள் கற்பந்தானே

விளக்கவுரை :


6589. கற்பமாம் சண்டரச சூதமப்பா காசினியில் சித்தரெல்லாம் மறைத்துவைத்தார்
பற்பமது வுலகோர்கள் அறியாமற்றான் பான்மைபெற நூல்களிலே மறைத்துச்சொன்னார்
அற்பமென்று நினையாரதே யருண்மைந்தாகேள் வன்புடனே யாமுனக்கு வுரைத்தநீதி
கற்பேந்திர காலமது நெடுங்காலந்தான் காசினியில் இருப்பதுவும் உண்மைதானே

விளக்கவுரை :


6590. உண்மையாஞ் சண்டரச பற்பந்தன்னை வுலகுபதி மாண்பர்களும் உளவறிந்து
தண்மையுடன் கைபாகஞ் செய்பாகத்தால் சட்டமுடன் செய்குவது மெய்யேயானால்
வண்மையாஞ் சித்தர்முனி நாதர்போலே வளமுடனே வையகத்தில் நெடுங்காலந்தான்
திண்மையுடன் வெகுகோடி காலமப்பா தீர்க்கமுட னிருப்பதுவும் உண்மைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar