போகர் சப்தகாண்டம் 6591 - 6595 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6591 - 6595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6591. உண்மையாம் வையகத்தில் நெடுங்காலந்தான் வுத்தமனே நாதாக்கள் சித்தரோடும்
பண்மையுள்ள சாத்திரங்கள் பலவாராய்ந்து பாருலகில் மாண்பர்களும் பிழைப்பதற்கு
கண்மையாய் காலாங்கி தாள்பணிந்து கர்த்தாவை யஞ்சலித்து முடிகள்சாய்த்து
நன்மைபெற வுந்தனுக்கு மனதுவந்து நாட்டினேன் உண்மைசத்தியமும்பாரே

விளக்கவுரை :


6592. சத்தியமா மென்னூலை முழுதும்பார்த்து சாங்கமுடன் செய்பவர்க்கு எல்லாஞ்சித்தி
முத்தியது பெறுவதற்கு காயகற்பம் முனையான பற்பமிது சூதபற்பம்
வெத்திபெற வஷ்டாங்க சித்தியெட்டும் வேதாந்தத் தாயினிட நடனமார்க்கம்
முத்தியது பெறுவதற்கு தேககற்பம் மூதுலகில் சத்தியர்க்கு பலிக்கும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6593. பலிக்குமே சூதமுண்ட மாண்பரெல்லாம் பாருலகில் மகானுபானென்பார்பாரு
ஜொலிக்குமே தேகமது கற்றூணாகும் சோராது வாசியது மேல்நோக்காது
சுலிக்காது இருகண்ணும் வருந்தியுந்தோன்றும் காசினியில் வேசியாக மாண்பரென்பர்
சலிக்காது சண்டரச பற்பமப்பா சட்டமுடன் செய்வேனே யோகிபாரே

விளக்கவுரை :


6594. பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே காலாங்கிநாதர்நீதி
ஆரப்பா எந்தனுக்கு உரைத்தமார்க்கம் வப்பனே யஞ்சலித்து முடிவணங்கி
சேரப்பா சமாதிமுகஞ் சென்றபோது செம்மலுடன் எந்தமக்கு கொடுத்தபாகம்
நேரப்பா சொல்லுகின்ற பஞ்சபூதம் நெடிதான வேதைமுகம் நன்றாய்த்தானே

விளக்கவுரை :


6595. வேதையாம் வேதைமுகம் பஞ்சபூதம் மேன்மையுள்ள செந்தூரம் காயகற்பம்
கோதையெனும் மனோன்மணியாள் கடாட்சத்தாலும் கொற்றவனார் நாதாக்கள் பாதத்தாலும்
பாதையெனும் பஞ்சபூத செந்தூரத்தை பாருலகில் மாணாக்கர் பிழைப்பதற்கும்
சூதையது கூறாமல் குமாரவேலா சுந்தரனே கைபாகஞ்செப்புவேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar