6956. அன்றான சாத்திரங்கள்
அனந்தங்கோடி வளவில்லா சூத்திரங்கள் கணக்கோயில்லை
குன்றான மலைபோலே
குவித்துவைத்தார் கொடிதான சாத்திரத்தின் மகிமையெல்லாம்
தென்றசையில் கும்பமுனி
செய்தநூல்கள் தேசத்தில் பாதியுண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர்
செய்தநூல்கள் வேட்கமுடன் மறுபாதி என்னலாமே
விளக்கவுரை :
6957. என்னவே கும்பமுனி என்றநாமம் எழிலான வகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே யகஸ்தியனார்
யென்றநாமம் பலபலவாஞ் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி
யென்றுமேதான் துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே
மகிமைகோடி தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
6958. முனியான சாத்திரங்கள்
பலநூல்கோர்வை மூதுலகில் பாடிவைத்தார் சித்தரெல்லாம்
கனியான நவகனியாம்
நூல்தானப்பா கருத்துடனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
பனியதுதான் சூரியனைக்
கண்டாற்போல பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள்
களவுமார்க்கம் துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே
விளக்கவுரை :
6959. அன்றான சாத்திரமாங்
கோர்வையப்பா வப்பனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
குன்றான மலைபோலே
கோடித்தங்கம் கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வைத்தியமும்
வாதமார்க்கம் செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீக
மாரணவேதம் வேண்டியதோர் கருமானம் மிகவுண்டாமே
விளக்கவுரை :
6960. உண்டான சாத்திரத்தில்
இல்லாமார்க்கம் வுத்தமனே பெருநூலிற்காணலாகும்
கண்டாலும் விடுவாரோ
பெருநூலப்பா காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம்
அதிலேதோயும் வித்தகனே மற்றோர்நூல் கண்பதில்லை
சண்டமாருதம்போலே
பனிரெண்டுகாண்டம் சங்கையற வாயிரத்துக் கொருகாண்டந்தானே
விளக்கவுரை :