6616. ஊதவே நவலோக மொன்றாய்ச்
சேர்ந்து வுத்தமனே வுருகியல்லோ களங்கமாகும்
நீதமுடன் களங்கெடுத்து
வுடைத்துமைந்தா நிஷ்களங்கமாகவல்லொ கல்வமிட்டு
சூதமது யீரிடைக்கு
ஒன்றேசேர்த்து சுத்தமுடன் கெந்தியது ரெட்டிப்பாக
வாதமது பலிப்பதற்கு
வருண்மைந்தாகேள் வளம்பெறவே தாளகமும் பலந்தான்கூட்டே
விளக்கவுரை :
6617. கூட்டியே கண்டரது
கால்தான்சேரு குணமான கெவுரியது களஞ்சிரெண்டு
நீட்டமுடன் மனோசிலையுங்
காலதாக நெடிதான வீரமது களஞ்சிநாலு
தாட்டிகமாய்த் துத்தமது
களஞ்சிரெண்டு தாக்கான பூரமது களஞ்சியாறு
வாட்டமுடன் இடைகண்டு
கல்வமிட்டு வளம்பெறவே தானரைக்க வகையைக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
6618. வகையான ஆறுவகை ஜெயநீர்தன்னால் வளம்பெறவே தானறைப்பாய் எட்டுசாமம்
துகையான சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி தோராமல் தானரைத்து பில்லைதட்டி
புகையாம லிருப்பதற்கு
ரவியில்வைத்து புகழான சீலையது வலுவாய்ச்செய்து
பகையான புடமதுவும்
மண்ணிலப்பா பாங்குபெற கோழியென்ற புடந்தான்போடே
விளக்கவுரை :
6619. புடமதுவுந் தீயாறி
சென்றபின்பு பத்தியுள்ள பூபாலா யுரைப்பேனப்பா
தடங்கண்டு வழிகண்டு
தண்மையோடு சட்டமுடன் மணலதனை நீக்கிமைந்தா
அடலான வாசல்தனை
யெடுத்துப்பாரு வப்பனே செந்தூரம் நீலவர்ணம்
மடலான செந்தூரந் தனையெடுத்து
மன்னவனே பின்னுமந்த கல்வம்பூட்டே
விளக்கவுரை :
6620. பூட்டியே சரக்கெல்லாங்
கல்வமிட்டு புத்தியுள்ள கண்மணியே ஜெயநீரப்பா
தாட்டிகமாய் ஆறுவகை
ஜெயநீர்தன்னால் சட்டமுடன் தானரைப்பாய்ப் பின்னுமல்லோ
வாட்டமுடன் தானரைத்து
பில்லைதட்டி வளமுடனே ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் சில்லிட்டுச்
சீலைசெய்து நீதியுடன் மண்மறைவிற் புடந்தான்தாக்கே
விளக்கவுரை :