6436. என்னவே காலாங்கி
நாதர்தம்மால் எழிலான எட்டுதிசை குளிகைகொண்டேன்
பன்னவே வசுவதா கடாட்சத்தாலே
பாலகனே பெருங்கற்பம் யானுங்கண்டேன்
துன்னவே தேவதா ரிஷிவரத்தால்
துப்புறவாய் மகமேரு கற்பங்கொண்டே
உன்னவே புஜண்டமகாரிஷி
சாபத்தால் வுத்தமனே பற்பமது பெற்றிட்டேனே
விளக்கவுரை :
6437. பெற்றேனே சிங்கிந்தா
ரிஷிவனத்தில் பேரான குளிகைகற்பம் யானுங்கொண்டேன்
கற்றதொரு முதலைகற்பம்
யானுங்கொண்டேன் கருவான பச்சைவண்ணப் புரவிகற்பம்
வெற்றியுடன் இமயகிரி
பர்வதத்தில் வேகமுடன் யேழுவரை சென்றேன்யானும்
பற்றியங்ஙன மேலிருந்த தேவர்
பாங்கான ரிஷிநாதர் முனிகண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6438. கண்டேனே யவரிடமும்
குளிகைகொண்டேன் காணவே மற்றொரு வகையுங்கண்டேன்
விண்டபொருள் இருபத்தோர்
வரையுஞ் சென்றேன் விட்டகுறை இருந்ததுவும் வனைத்துங்கண்டேன்
கொண்டல்முடி யச்சுதனார்
மூலிகற்பம் கொடிதான சஞ்சீவி யனைத்துங்கண்டேன்
சண்டமாருதம்போலே புரவிகற்பம்
சாங்கமுடன் கண்டேன் என்றிட்டார்தானே
விளக்கவுரை :
6439. தானான புரவியது எந்தனுக்கு
தண்மையுள்ள கற்பமது கொடுத்ததாலே
கோனான எந்தேவர்
காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
கிருபையாலும் தேற்றமுடன் கற்பமது கொண்டுமல்லோ
பானான வையகத்தில்
பகைவர்தம்மை பட்சமுடன் வென்றுமல்லோ ஜெயித்திட்டேனே
விளக்கவுரை :
6440. இட்டேனே புலிப்பாணி
மைந்தாகேளு எழிலான கற்பமதை யாருக்குந்தான்
தொட்டகுறி போலாகச்
சொல்லிவந்தேன் துரைராஜ சுந்தரனே யுந்தமக்கு
விட்டகுறை இருந்ததொரு
புண்ணியத்தால் விருப்பமுடன் உந்தனுக்கு யுபதேசித்தேன்
சட்டமுடன் எந்நாளுங்
காலாங்கிபாதம் சதாகாலந்தான் வணங்கிவாழுவீரே
விளக்கவுரை :