போகர் சப்தகாண்டம் 6776 - 6780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6776 - 6780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6776. உருக்கியே பத்துமுறை பத்துநாளப்பா முனையான மாத்திரையை கிராசமீவாய்
செருக்குடனே பத்துநாளானபின்பு செவ்வையுடன் மூசைதனை யெடுத்துமைந்தா
பெறுக்கவே யாதுவகை ஜெயநீர்தன்னில் பேரான வெள்ளிதனை யுருக்கி சாய்ப்பாய்
சுருக்கமது வாராது வெள்ளிக்கப்பா சுந்தரனே பத்துமுறை யுருக்கியூத்தே

விளக்கவுரை :


6777. ஊத்தையிலே குண்டசெம்பு வெள்ளிதானும் உத்தமனே மஞ்சளென்ற வர்ணங்காணும்
நாத்தமுள்ள செம்பதுவும் ஊறலேகி நலமானவெள்ளியது பழுக்கும்பாரு
பாத்தவர்கள் வாதமென்ற சூதுவித்தை பாருலகில் மகிமைதனை யறிவாரோதான்
நேர்த்தியுள்ள கண்டரது மகிமையாலே நேர்மையுள்ள வெள்ளியது பழுக்கலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6778. ஆச்சப்பா மலைநாட்டுக் குள்ளிருக்கும் வப்பனே குரும்பரென்ற சித்துதானும்
பாச்சலுடன் காடுமலை வணாந்திரங்கள் பாங்கான குகைதனிலே இருந்துகொண்டு
ஏச்சலது வாராமல் எந்நாளைக்கும் எழிலான கண்டருட வேதைதன்னை
ஆச்சரியமாகவல்லோ செய்துகொண்டு வப்பனெ கடைமாறி யுண்ணிவாரே

விளக்கவுரை :


6779. உண்ணுவார் சமுசாரி தம்மிடத்தில் உத்தமனே நிதிவாங்கி பொன்கொடுத்து
திண்ணமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன் துய்யவெள்ளி பத்தரையுங்காணும்காணும்
எண்ணரிய நற்பொருளைக் காணாமற்றான் எழிலான சமுசாரி எல்லாமாய்ந்தார்
பண்ணவெனக்கும்மையது வறியாமற்றான் பாருலகில் யானுமல்லோ மயங்கினேனே

விளக்கவுரை :


6780. மயங்கியதோர் எந்தனுக்கு மன்னாகேளு மகத்தான காலாங்கி கிருபையாலே
நயம்படவே வித்தையது யானுங்கண்டு நாதாந்த சித்தொளிவின் ஒளியுங்கண்டு
ஜெயம்பெறவே வாதமென்ற வேதைதன்னை சேர்வையுடன் உந்தனுக்கு யானுந்தந்தேன்
பயப்படவே யெந்நாளும் பதாம்புயத்தை பணிந்துமல்லோ வசனித்து துதிப்பாய்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar