போகர் சப்தகாண்டம் 6651 - 6655 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6651 - 6655 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6651. பாரப்பா புலிப்பாணி யின்னங்கேளு பாகமுடன் முனசெய்த நாகந்தன்னை
நேரப்பா கரிவங்கந் தானுங்கூட்டி நேர்மையுடன் தானுருக்கிச் செப்பக்கேளிர்
ஆரப்பா தேன்வளைய லென்றபூநீர் வப்பனே தானுருக்கி கவுவிட்டாட்டி
தீரப்பா நாகமதற் கங்கிபூட்டி திறமுடனே ஏழுவகைச் சீலைசெய்யே

விளக்கவுரை :


6652. ஏழான சீலையது வலுவாய்ச்செய்து எழிலான ரவிதனிலே காயவைத்து
ஆழான புடமதுவுங் கோழியப்பா வப்பனே தான்போட்டு எடுத்துப்பாரு
மீளான நாகமது கட்டும்பாரு மிக்கான தவளையென்றே செப்பலாகும்
கோளாறு வாராது இந்தபாகம் கொற்றவனே நாகமது கட்டிப்போச்சே

விளக்கவுரை :

[ads-post]

6653. கட்டியதோர் நாகமது யின்னஞ்சொல்வேன் கருவான கையானின் சாற்றினாலே
திட்டமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா திறமான நாகமது சீறலேகி
சட்டமுடன் தவளையது போலேயாகி தகமையுள்ள நாகமது பகையடங்கி
நட்டமில்லா களங்கமதுபோல் ஜோதியோடும் நலமான நாகத்தின் கட்டுதானே

விளக்கவுரை :


6654. தானான நாகமது கட்டுதன்னை தண்மையுள்ள பூபாலா சாற்றக்கேளு
மானான மருதோன்றி சாற்றினாலே மார்க்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பானான பரஞ்சுடர்போல் ஜோதிமின்னும் பாலகனே பத்துமுறை உருக்கிச்சாய்க்க
தேனான நாகமது கண்ணடைந்து யேற்றமுடன் புத்துமென்ற புட்டுதானே

விளக்கவுரை :


6655. புட்டான நாகமதைத் தானெடுத்து புகழான பழச்சாற்றில் உருக்கிச்சாய்க்க
திட்டமுடன் பத்துமுறை வுருக்கிப்பாரு தீர்க்கமுள்ள சவளையது போலேயாகும்
கட்டமுடன் பாராமல் விராலிதன்னை கருவாகத் தானுருக்கிச்சாய்த்துப்பாரு
நட்டமென்ன சிவந்தகொடி வேலிதன்னை நன்றாக பத்துமுறை சாய்த்திடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar