போகர் சப்தகாண்டம் 6491 - 6495 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6491 - 6495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6491. தானான மாற்றினிட வேகமப்பா தாரணியில் சித்தர்தம்மால் சொல்லப்போமோ
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே யானுரைத்தேன் உந்தமக்கு
தேனான முறையதுவை யாருஞ்சொல்லார் தேவாதி என்குருவே எந்தன்மைந்தா
பானான பரஞ்சுடரே யுந்தமக்கு பாரினிலே பாலித்தேன் பண்பாய்த்தானே  

விளக்கவுரை :


6492. பண்பான வேதையிது தாம்பிரவேதை பாலகனே யாருந்தான் விள்ளாரப்பா
நண்பான சாத்திரத்தில் சொல்லிருந்தும் நலமான மனோன்மணித்தாய் மறைத்தபாவம்
உண்மையாய் உளவறிந்து கண்மலரோ பொன்மலரோ நீயெனக்கு கருகாதே
உண்மையாய் யொருவருக்கும் காட்டொண்ணாதே

விளக்கவுரை :

[ads-post]

6493. காட்டினால் லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும் கனமோசங் கனலோகம் கருவாய்ப்போகும்
நீட்டமுடன் சிவயோகி மாண்பரப்பா நீணிலத்தில் செய்துமல்லோ கண்டாராய்வார்
வாட்டமுடன் முறைபாடு கைபாடாக வளமையுடன் செய்தவர்க்கு எல்லாஞ் சித்தி
தாட்டிகமாய்ப் புத்திவான் அறிவானப்பா சண்டாள கருமிகளு மறியார்பாரே

விளக்கவுரை :


6494. பாரேதான் இன்னமொரு போக்குசொல்வேன் பண்பான பரிகாரமானபேர்க்கு
நேரேதான் புலிப்பாணி மன்னாகேளு நேர்மையுடன் உந்தமக்கு உபதேசிப்பேன்
சீரேதான் பெரும்பாடியாம் லவணந்தன்னை சிறப்புடனே தானெடுத்து மனதுவந்து
நீரேதான் சொன்னமுறை வழிபாடாக நிமலனே கைபாகஞ் செய்திடாயே

விளக்கவுரை :


6495. செய்யவென்றால் உப்பதனை சேசைவாங்கி செப்பவென்றால் வன்னியது பட்டையப்பா
கொய்யவே தானிடித்து மாவதாக்கி சுகம்பெறவே யுப்புக்கு கீழ்மேலிட்டு
துய்யநல்ல வுப்பதனை நடுவேவைத்து துரைராஜ சுந்தரனே செப்பக்கேளு
வெய்யதமிழ்ப் பண்டிதங்கள் பலிப்பதற்கு வேதாந்தத் தாயாரை வேண்டிக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar