6656. பத்தான முறையதுஞ்
சாய்த்தாயானால் பாலகனே நாகமது கொடிகட்டாம்
சத்தான நாகமது கட்டேயானால்
சதகோடி சூரியர்போல் பிரகாசிக்கும்
முத்தமரும் ஞானமுள்ளோர்
செய்யமாட்டார் மூதுலகில் சமுசாரி செய்யும்வித்தை
குத்தமது வாராது நாகந்தன்னை
குணமுடனே செய்பவனே வாதியாமே
விளக்கவுரை :
6657. வாதியாம் நாகமென்ற
களங்கெடுத்து வரிசைபெற சூதமது நேரேசேர்த்து
நீதியாம் ஆறுவகை
ஜெயநீர்தன்னால் நீட்டியரை யெண்சாமம் தானுமப்பா
ஆதியெனும் பரஞ்சுடரை
மனதிலெண்ணி சோராமல் தானரைப்பாய் மெழுகுபோலாம்
பாதிமதி சடையணியுந்
தம்பிரானால் பாலகனே மெழுகது போலிருக்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
6658. தானான மெழுகதனை பில்லைதட்டி தகமையுடன் ரவிதனிலே காயவைத்து
கோனான குருசொன்ன வாக்குபோலே
கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
மானான மணல்மறைவிற்
புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் நீலவர்ணம்
பானான புடமதுவும்
பத்தேயாகும் பாலகனே தானரைத்துப் போடுபோடே
விளக்கவுரை :
6659. போடவே செந்தூரம்
அருணன்போலாம் பொங்கமுடன் தானெடுத்து செப்பக்கேளு
ஆடவே ஜீவனத்துக்
கிடமேதென்றால் வப்பனே வழிபாடு சொல்வேனப்பா
நீடவே செம்பதுதான்
களஞ்சிபத்து நெடிதான செந்தூரங் களஞ்சியொன்று
கூடவே தானுருக்கிக்
கொடுத்துப்பாரு கொற்றவனே மாற்றதுவும் ஒன்பதாமே
விளக்கவுரை :
6660. தாமேதான் செம்பதனை வாரடித்து
தண்மைபெற புடம்போட பிறவித்தங்கம்
வேமேதான் காவிக்கு
முப்புக்கேகா வேதாந்தக் கண்மணியே விளக்கம்பாரு
ஆமேதான் பசுமையென்ற
தங்கமப்பா வப்பனே சமுசாரிக்கானதங்கம்
நாமேதான் சொன்னபடி
நாகத்தங்கம் நலம்பெறவே செய்பவனே புத்திவானே
விளக்கவுரை :