போகர் சப்தகாண்டம் 6561 - 6565 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6561 - 6565 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6561. அதிகமாம் வயிரமென்ற போக்குதன்னை வப்பனே யானுரைத்தேன் நுணுக்கமெத்த
பதிதமுள்ள வைப்பதனை சித்துதாமும் பாருலகில் மாண்பருக்குத் தெரியாமற்றான்
துதியோடும் பதியோடும் நூல்கள்சொல்லி துப்புரவாய் மதிதனக்கு யேராமற்றான்
விதியான சிடிகையென்ற கைபாகத்தை விட்டகற்றி நூல்மறைத்து விலக்கினாரே

விளக்கவுரை :


6562. விலக்கவே வைப்புமுதல் உளவுதன்னை வெகுபேர்கள் அறியாமல் வினயங்கொண்டு
துலக்கமுடன் நூல்தனைக்காணாமற்றான் துப்புரவாய்க் கருவிகரணாதியந்தம்
பலக்கவே சிடிகையென்ற வேதைதன்னை பாராமல் பாருலகில் கெட்டார்கோடி
ஜலக்கம்ப மென்றதொரு கெந்திபோலே சாங்கமுடன் செய்வதற்கு மதிபோனாரே

விளக்கவுரை :

[ads-post]

6563. மதியான வயிரமது பிறவிபோலாம் மகத்தான நாதாக்கள் செய்தவேதை
துதியான பிறவியென்ற கல்லினாலே துப்புரவாய் ராசாதிராஜர்தாமும்
நதிகளிலும் மலைகளிலும் கண்டெடுத்த நாதாந்த சித்தொளியே கல்போலாகும்
பதியான சுனைதனிலும் ஓடைதன்னில் பாங்குடனே வயிரமது விளையுந்தானே

விளக்கவுரை :


6564. தானான இன்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தம்பிரானே
கோனான இந்தமுறை வேதையப்பா குவலயத்தில் நாதாக்கள் கூறவில்லை
பானான படிகமது சேர்தானொன்று பாலகனே பூநீரும் பலந்தானொன்று 
தேனான தேன்வளையல் சேர்தான்காலாம் தேற்றமுடன் பவளமென்ற புத்துகாலே

விளக்கவுரை :


6565. காலான பண்பவள சேர்தான்காலாம் கண்மணியே வளையலுப்பு சேர்தான்காலாம்
மாலான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி மகத்தான வங்கமென்ற செந்தூரந்தான்
நூலான நூற்படியே கால்சேர்கூட்டி நுட்பமுடன் தானுருக்கிக் கருவமைத்து
சூலான கெற்பமது வுள்ளிருக்க துப்புரவாய் மணிபோலே வார்த்திடாயே
விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar