6861. ஏகாது உப்புக்குங்
காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன்
போகாது புடத்துக்கு
வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை
சாகாமல் இருந்திடலாம்
செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு
வேகாது தேகமது தீயிற்பட்டால்
வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே
விளக்கவுரை :
6862. கொள்ளவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி குணமுள்ளானே
வெள்ளமுர்தமானதொரு
யெந்தன்சாமி தெளிவான காலாங்கி நாதர்தாமும்
உள்ளபடி திரேதாயி
னுகத்திலப்பா வுத்தமனே தாமிருந்த வண்மையெல்லாம்
கள்ளமின்றி இகழாமல்
யானுரைப்பேன் கைலாச புலிப்பாணி கருவாய்க்கேளே
விளக்கவுரை :
[ads-post]
6863. கருவான திரேதாயி
னுகத்திலப்பா காலாங்கிநாதருட வுண்மையெல்லாம்
திருவான குருமுனி சொன்னநீதி
தீர்க்கமுடன் இருவரது சரித்திரங்கள்
குருவான என்தேவர் எந்தனுக்கு
கூறியதோர் லோகவதிசயங்களெல்லாம்
கருவறிந்து வழியறிந்து
உந்தமக்கு கழறுவேன் புலிப்பாணி கவிவல்லோனே
விளக்கவுரை :
6864. வல்லதொரு
திரேதாயினுகத்திலப்பா வளமான லட்சத்தி நாற்பத்தாண்டில்
புல்லான வுலகமது
மகிமைசொல்வேன் புகழான பிரளயங்கள் நேர்ந்தபோது
கல்லான மலைகளுமே முழுகியல்லோ
கடலேழுந்தான்கடந்து மலைமட்டந்தான்
வல்லமையாய்
சத்தசமுத்திரங்களெல்லாம் வளமுடனே பொங்கியது நிற்கலாச்சே
விளக்கவுரை :
6865. நிற்கையிலே காலாங்கி
நாதர்தாமும் நீடாழி யுலகமதைக் கண்டேயேங்கி
சொற்பமுடன் தன்மனதில்
எண்ணியல்லோ தோறாமல் காலாங்கி கமலர்தாமும்
விற்பனர்கள் இருவருமாய்
காலாங்கிகிரியில் வீற்றிருந்தார் மண்டலந்தான் நெடுநாளப்பா
அற்பமுடன் வையத்து
மாண்பர்தம்மில் வனேகம்பேர் அம்மலையில் இருந்திட்டாரே
விளக்கவுரை :