6876. கண்டாரே நெடுங்காலந்
தவசிருக்கும் கருவான ரிஷியாரை மனதுவந்து
தெண்டமுடன் காலாங்கி
நாதர்தாமும் தேற்றமுடன் ரிஷியாரைக் கேட்கும்போது
சண்டமாருதம்போலே
ரிஷியார்தாமும் சட்டமுடன் மனதுவந்து சாற்றலுற்றார்
திண்ணமுடன் திரேதாயி
னுகத்திலப்பா திருவாண்டு முதல்வருஷஞ் சமாதிகாணே
விளக்கவுரை :
6877. தானான காலாங்கி நாதரேகேள்
தகமையுடன் திரேதாயினுகத்திலப்பா
தேனான மனோன்மணியாள்
கிருபையாலே திரளான பிரளயங்கள் வந்தபோது
மானான மகதேவர் கடாட்சந்தானே
மன்னவனே நெடுங்காலந் தவசிருந்தேன்
பானான வையகத்தில்
ஆரேனுந்தான் பக்கல்வந்து கேட்டதில்லை என்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
6878. இட்டாரே வராகரிஷி
முனிவர்தானும் எழிலான காலாங்கி தன்னைக்கண்டு
விட்டகுறை இருந்ததொரு
புண்ணியத்தால் விருப்பமுடன் எந்தனையும் காணலாச்சு
சட்டமுடன் உந்தனுக்கு
உபதேசங்கள் சாங்கமுடன் போதிப்பேன் என்றுசொல்லி
திட்டமுடன் உலகத்தில்
மகிமையெல்லாம் தீர்க்கமுடன் காலாங்கிக் கோதினாரே
விளக்கவுரை :
6879. ஓதினார் சமாதிமுகம்
இருந்தகாலம் வுத்தமனார் காலாங்கி நாதருக்கு
ஆதியெனும் பராபரத்தின்
ரகசியத்தை வப்பனே காலாங்கிக் கோதினார்காண்
நீதியுடன் உபதேசம்
பெற்றுமல்லோ நிகட்சியுடன் தெற்குமுகம் திரும்பிவந்தார்
பாதிமதி சடையணிந்த
தம்பிரான்போல் பரமகுரு ரிஷியொருவர் இருந்திட்டாரே
விளக்கவுரை :
6880. இருந்தாரே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி இன்புள்ளானே
பொருந்தவே
திரேதியினுகத்திலப்பா பொங்கமுடன் காலாங்கி நாதர்தாமும்
திருந்தியே கண்டதொரு
வதிசயங்கள் தீர்க்கமுடன் எந்தனுக்கு சொன்னநீதி
வருந்தவே நரசிங்க
ரிஷியார்தன்னை வளப்பமுடன் கண்டதொரு வுண்மைபாரே
விளக்கவுரை :