போகர் சப்தகாண்டம் 6516 - 6520 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6516 - 6520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6516. சித்தான சித்துமுனி இந்தமார்க்கம் சிறப்புடனே சாத்திரத்தில் சொல்லவில்லை
முத்தான நூலெல்லாம் அனேகங்கண்டேன் முனையான பஞ்சபூத பேதந்தன்னை
சத்தேனும் மாண்பர்களும் பிழைப்பதற்கு தயவுவைத்து யாரேனுங் கூறவில்லை
முத்திபெற சாத்திரங்கள் கோடாகோடி மூதுலகில் சொன்னவர்கள் கோடியுண்டே

விளக்கவுரை :


6517. கோடியே நாதாந்த சித்துதாமும் குறிப்புடனே சாத்திரங்கள் அதிதஞ்சொன்னார்
தேடியே சாத்திரங்கள் தலைவகுத்து செப்பினார் யாதொன்றுங் கண்டதில்லை
பாடியதோர் வெகுநூல்கள் கைமறைப்பு பாருலகில் பாடிவைத்தார் சித்தர்தாமும்
நீடியே யுந்தனுக்கு வாதங்காண நீதியுடன் போதித்தேன் உண்மைதானே

விளக்கவுரை :

[ads-post]

6518. உண்மையா மின்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே நாதாக்கள் சொன்னாரில்லை
வண்மையுள்ள காலாங்கி கிருபையாலே வளம்பெரிய சித்தரெல்லாம் மறைத்துவைத்த
தண்மையுள்ள கைபாகஞ்செய்பாகத்தை சட்டமுடன் நாதாக்கள் கூறவில்லை
நண்மைபெற மாண்பர்களும் பிழைக்கவென்று நன்மையுடன் யானுரைப்பேன் பண்புதானே

விளக்கவுரை :


6519. தானான சூதமது பலந்தானைந்து தாக்குடனே சுத்திசெய்து எடுத்துமைந்தா
பாங்குடனே மருதாறு சிங்கிதன்னை பட்சமுடன் தானெடுத்து செப்பக்கேளு
மானான பலமதுவும் பத்தேயாகும் மகத்தான கல்வமதி லிட்டுமைந்தா
தேனான செவ்வாவின் பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


6520. நாலான சாமமது வரைத்தபின்பு நலமான மூசையது குரைதான்செய்து
பாலான ரவிதனிலே காயவைத்து பாங்குபெற மூசைதனை யெடுத்துமைந்தா
தாலான தளவாயாம் பாண்டந்தன்னில் தண்மையுடன் பூமணலைக்கொட்டியல்லோ
காலான மூசைதனை மையம்வைத்து கண்மணியே மூசைதனில் சூதந்தாக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar