6881. உண்மையாங் காலாங்கி
நாதர்தாமும் வுத்தமனார் திரேதாயினுகத்திலப்பா
வண்மையுடன் காலாங்கி
நாதர்தாமும் வாகுடனே மலைமீதிற் கண்டசேதி
திண்மைபெற மார்க்கமது
யாதென்றாக்கால் தீர்க்கமுடன் கிரிசுத்தி வருகும்போது
வண்மையுள்ள சுனையொன்று
தடாகமுண்டு வளம்பெரிய தவசிதனை பார்த்திட்டாரே
விளக்கவுரை :
6882. பார்த்தாரே கரசிங்கரிஷியார்தம்மைப் பட்சமுடன் காலாங்கி காணும்போது
தீர்த்தமுடன் ரிஷியாரின்
தவசின்வேடம் திரேகமெல்லாம் சிம்பத்தின் ரூபமாகும்
நேர்த்தியுள்ள வர்ணமது
தங்கவர்ணம் நேர்மையுடன் வையகத்திலிருந்தசித்து
ஆர்த்ததொரு திருமுகம்
மனிதரூபம் வப்பனே தவநிலையை அறிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
6883. அறிந்தாரே தவசியுட
மகிமைதன்னை வன்புடனே மனதுவந்து யருகில்வந்து
சிறந்ததொரு ரிஷியாரைக்
காலாங்கிநாதர் தேற்றமுடன் வினவியங்கே கேட்கும்போது
குறித்ததொரு
காலாங்கிநாதருக்கு குணமான நரசிங்க ரிஷியார்தாமும்
மறித்துமே காலாங்கி
நாதர்தாமும் மன்னவனே மார்க்கமது கூறுவேனே
விளக்கவுரை :
6884. கூறுவேன் என்றதுமே
ரிஷியார்தாமும் குணமான காலாங்கி நாதருக்கு
தேறுதலாய் உபதேசம்
மிகவுஞ்சொல்லி தேற்றமுடன் நெடுங்காலம் மலையிலப்பா
மாறுலக வையகத்தில்
தவசிருந்து மன்னவனே யானறிந்த மகிமைகோடி
ஆறுதலாய் உபதேச வதிதங்கூறி
வப்பனே போகவென்று விடைதந்தாரே
விளக்கவுரை :
6885. தந்தாரே காலாங்கி நாதருக்கு
தாரணியில் அதிசயங்கள் அதிதஞ்சொன்னார்
பொந்தியே காலாங்கி
நாதர்தாமும் போனதொரு கிரிகைதனில் மேற்குபாகம்
சொந்தமுடன் காணுதற்கு
மனதுவந்து தோறாமல் கிரியோரம் வருகும்போது
விந்தையுடன் அதிசயங்கள்
என்னவென்றால் வீரான வாமரிஷி தனைக்கண்டாரே
விளக்கவுரை :