6471. பேதமாம் சூதமென்ற
வெண்ணைதானும் பேரான கெந்தியென்ற திராவகத்தால்
நீதமுடன் தானரைப்பாய்
யிரண்டுசாமம் நிர்மலமாய் சூதமதை மடிந்துகொள்ளும்
போதமுடன் வாசியென்ற
குப்பிதன்னில் பொங்கமுடன் மாக்கல்லால் கொண்டுமூடி
வாதமது பலிப்பதற்கு
மெய்யேயானால் வளமான சீலையது வலுவாய்ப்போடே
விளக்கவுரை :
6472. போடேநீ குப்பிக்கு சீலையேழு
பொங்கமுடன் வாயைவிட்டு சீலைசெய்து
கூடேநான் தளவாயாம்
பாண்டந்தன்னில் கொற்றவனே மணலிட்டுக் குப்பிவைத்து
நாமேதான் குப்பிதனில்
மணலுமிட்டு நயமாக மேல்மூடி சீலைசெய்து
ஆடேநீ நாற்சாம மெரித்தபோது
வப்பனே செந்தூர மாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6473. பாரேதான் செந்தூரந்
தனையெடுத்து பாங்குடனே நாதாக்கள் சொன்னமார்க்கம்
சேரேதான் வெள்ளியது
களஞ்சிநூறு தேற்றமுடன் தானெடுத்து குகையிலிட்டு
கூரேதான் தானுருக்கி
மைந்தாகேளு குறிப்புடனே குருவொன்று தன்னிலீய
வீரேதான் வர்ணமது
என்னசொல்வேன் வீறான போக்கதுவும் கூறப்போமோ
விளக்கவுரை :
6474. போமேதான் வெள்ளிதனை யுருக்கிப்பார்க்க போக்கான வெள்ளியது தங்கமாச்சு
நாமேதான் சொன்னபடி
தங்கமாற்று நாதாக்கள் தம்மாலே கூறப்போமோ
வேமேதான் பிறவியென்ற
தங்கந்தானும் வேதாந்தத் தங்கமது இதற்கீடுண்டோ
ஆமஏதான் சிவயோகத் தங்கமாகும்
அப்பனே காலாங்கித் தங்கமாமே
விளக்கவுரை :
6475. தங்கமா மின்னமொரு
போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தயவாய்க் கேளு
வங்கமதைத் தான்கொடுத்து
வூதிற்செம்பை வளமாகத் தானுருக்கி எடுத்துமைந்தா
துங்கமுள்ள செம்பதனில்
நூற்றுக்கொன்று துப்புரவாய்த் தானுருக்கிக் குருவொன்றீய
பங்கமிலாத் தங்கமது
என்னசொல்வேன் பாருலகில் சிவயோகிக் காணலாச்சே
விளக்கவுரை :