6836. பாரப்பா யின்னமொரு
பரிகாரந்தான் பாலகனே ஸ்தூலமது வுறுதிசெய்ய
ஆரப்பா மணலிரும்பு
கொண்டுவந்து வப்பனே வுருக்கியல்லோ தகடடித்து
சீரப்பா முன்சொன்ன பாஷாணத்தை
சிறப்புடனே நிம்பழத்தின் சாற்றினாலே
ஊரப்பா மூன்றுவகை
பாஷாணந்தான் வுத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
6837. நாலான சாமமது தானரைத்து
நலமான இரும்பதனை தகடதாக்கி
பாலான சரக்கெல்லாம் மேலேபூசி
பட்சமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலான சில்லிட்டுச்
சீலைசெய்து மார்க்கமுடன் கோழியென்ற புடந்தான்போடு
சூலான வயமதுவும் களங்கமாகி
துப்புரவாய்த் தானிருக்கும் வயந்தான்காணே
விளக்கவுரை :
[ads-post]
6838. காணவே யவரெலாந்தானெடுத்து
கருவாகப் புடமதுவாய்ச்சேர்த்துக்கொண்டு
தோணவே கடைசரக்கு
செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும்
மாணவே கெந்தகமும்
லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும்
நீணவே வகைவகைக்குப்
பலந்தான்காலாய் நிஷ்களங்கமாகவல்லோ பழச்சார்தானே
விளக்கவுரை :
6839. தானான சாரதுவும்
பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில்
தேனான செம்பழத்தின்
சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாய் நாலுசாமம்
பானான வில்லையது லகுவாய்ச்
செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
மானான வோட்டிலிட்டுச்
சீலைசெய்து மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே
விளக்கவுரை :
6840. போடேதான் இப்படியே
புடந்தான்போடு பொங்கமுடன் தானரைத்து வில்லைதட்டி
நீடேதான் முன்னுரைத்த
பாகம்போலே நீதியுடன் வில்லைதட்டிக் காயவைத்து
கூடேதான் சில்லிட்டுச்
சீலைசெய்து கொற்றவனே கோழியென்ற புடந்தான்போடு
போடேதான் மண்மறைவிற்
பத்துமுறைபோடு பொலிவான வயமதுவும் சிவக்கும்பாரே
விளக்கவுரை :