போகர் சப்தகாண்டம் 6501 - 6505 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6501 - 6505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6501. எரிப்பதற்கு வயணமது சொல்வேனப்பா எழிலான தளவாயாம் பாண்டந்தன்னில்
திரியான மணலதனைக் கொட்டிமைந்தா தீர்க்கமுடன் கல்லதனை மேலேவைத்து
சொரியான கருமணலை யின்னுமல்லோ சோராமல் பாண்டமதில் மணலைக்கொட்டி
சரியாக மேற்பாண்டந் தன்னைமூடி சட்டமுடன் தானெரிப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


6502. நாலான சாமமது எரித்தபோது நலமான செந்தூர மென்னசொல்வேன்
காலான செந்தூரந் தனையெடுத்து கருமான வெள்ளிதனில் பத்துக்கொன்று
மாலான வெள்ளியது வுருகும்போது மகத்தான செந்தூரங் களஞ்சியீந்து
கோலான கரியினால் கிண்டும்போது கொற்றவனே வுட்கொண்டு பழுக்கும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6503. பாரேதான் மற்றதுவும் என்னசொல்வேன் பாங்கான வயததுவும் எட்டுமாகும்
கூரேதான் நாலுக்கோர் தங்கஞ் சேர்த்து குறிப்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு
நேரேதான் மறுபடியும் உருக்கிப்பாரு நேர்மையுள்ள தங்கமது கூறப்போமோ
ஆரோதான் செய்வார்கள் இந்தப்போக்கு வப்பனே யுந்தமக்கு வுரைத்தேன்தானே

விளக்கவுரை :


6504. தானான புடத்தங்கம் பிறவித்தங்கம் தண்மையுள்ள குடோரியது உறங்காதப்பா
கோனான சிவராச தங்கமப்பா கொற்றவனே லவணமதிற் பிறந்ததங்கம்
தேனான சிவயோகிக் குகந்ததங்கம் தெளிவான நாணயத்துக் குகந்ததங்கம்
மானான வையகத்தில் மாண்பர்தாமும் மார்க்கமுடன் செய்கின்ற தங்கமாமே

விளக்கவுரை :


6505. தங்கமாம் லவணமென்ற சாரகாரம் தாரணியில் வெகுமாண்பர் காணமாட்டார்
புங்கசித்தி எட்டுரியோன் காண்பான்பாரு புகலான சித்துமுனி செய்யுந்தங்கம்
வங்கமதற் கேங்காது வர்ணத்தங்கம் வளமான புரிசடையோன் அணியுந்தங்கம்
இங்கிதமாய் சமுசாரி வழங்குந்தங்கம் யெழிலான வுப்பினிட தங்கங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar