போகர் சப்தகாண்டம் 6366 - 6370 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6366 - 6370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6366. தானான புலிப்பாணி யின்னங்கேளு தண்மையுள்ள பூபாலா சொல்வேனப்பா
கோனான குருவருளும்பெற்றோனாக குவலயத்தில் கீர்த்தி கொண்டு இருப்போனாக
தேனான மனோன்மணியாள் பதாம்புயத்தை தேற்றமுடன் எந்நாளும் துதிப்போனாக
பானான பரமசிவன் புத்திவானாய் பாருலகில் வசித்திருக்குச் சீடன்பாரே

விளக்கவுரை :


6367. பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேகேளு
நேரேதான் உந்தமக்கு காயகற்பம் நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறேன் நேர்மையாக
வீரேதான் நெல்லிக்காய் கெந்திதானும் விருப்பமுடன் பலமதுவும் ஐந்துசேரு
சீரேதான் தாளகமும் ரெண்டுசேரு சிறப்பான சிங்கியது வொன்றுகூட்டே

விளக்கவுரை :

[ads-post]

6368. கூட்டவே மனோசிலையு மொன்றுசேரு குணமான கௌரியது ஒன்றுசேரு
நாட்டமுடன் பூரமது ஒன்றுசேரு நலமான வீரமது அரையேசேரு
வாட்டமுடன் அபினியது ஒன்றேசேரு வகுப்பான லிங்கமது ஒன்றுகூட்டு
தேட்டமுடன் துருசதுவும் ஒன்றேசேரு தெளிவான துத்தமது ஒன்றுதூக்கே

விளக்கவுரை :


6369. தூக்கியே சிற்றண்டங் கருவிலப்பா துடியாகத் தானரைப்பாய் நான்குசாமம்
தாக்குவாய் வாலுழுவைத் தயிலத்தாலே தானரைப்பாய் ஜாமமது எட்டதாக
நோக்கமுடன் கருஞ்சீரந் தயிலமப்பா நுணுக்கமுடன் தானரைப்பாய் ஆறுசாமம்
வாக்கதுவும் பிசகாத வண்ணமப்பா வளமான தாழம்பூ சார்தான்கூட்டே 

விளக்கவுரை :


6370. சாரான தாழம்பூ நாலுசாமம் தண்மையுடன் மந்தாரை நாலுசாமம்
நாறான சரக்கெண்ணை நாலுசாமம் நலமான கொடிவேலி யாறுசாமம்  
தேறான கௌதும்பை யாறுசாமம் தேற்றமுடன் துவரையது நாலுசாமம்  
சேறான வெண்குன்றி யாறுசாமம் செம்மையுடன் தானரைப்பாய் மைந்தாகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar