போகர் சப்தகாண்டம் 6476 - 6480 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6476 - 6480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6476. ஆச்சப்பா செம்பதுவுந் தங்கமாச்சு வப்பனே நாதாக்கள் மறைத்துவைத்தார்
மாச்சலது வாராது தங்கச்செம்பாம் மகத்தான தங்கமது இதற்கீடுண்டோ   
பூச்சுடைய பிறவியென்ற தங்கரேக்கு புகலவொண்ணா சுயத்தங்கம் இதற்கீடுண்டோ
ஆச்சர்ய மானதொரு தங்கமாச்சு வப்பனே நாதாக்கள் மறைத்தார்தானே

விளக்கவுரை :


6477. தானான தங்கமதைத் தானெடுத்து தண்மைபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
கோனான குகைதனிலே விட்டுருக்கி கொற்றவனே செம்பதுவும் ஒன்றேயீந்தால்
தேனான வெள்ளியது பழுக்கும்பாரு தேற்றமுடன் மாற்றதுவுங் கூறப்போமோ
மானான தேவேந்திரன் வீற்றிருக்கும் மகத்தான வாணியென்ற தங்கமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6478. ஆணியா மின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
காணியாஞ் செந்தூரம் எடுத்துமைந்தா காத்துடனே குடவனிலே நூற்றுக்கொன்று
வாணிபதந் தான்வணங்கி கொடுத்துப்பாரு வளமான குடவனது வூறலேகி
ஆணியாந் தங்கமது கொப்பேசொல்வார் வப்பனே இந்திரபீட தங்கமாச்சே

விளக்கவுரை :


6479. இந்திரனார் வீற்றிருக்கும் ஆணித்தங்கம் எழிலானத் தங்கமது எவர்தான்செய்வார்
சுந்தரம்போல் சிவவேடம் பூண்டுமல்லோ துப்புரவாய்த் தானிருக்கும் யோகவான்கள்
விந்தையுடன் வினோதமென்ற வேதைதன்னை விருப்பமுடன் செய்துமல்லோ மனதுவந்து
அந்தரமெலாம் புகழவரமும்பெற்று வப்பனே வசித்திருப்பார் போகமாண்பே

விளக்கவுரை :


6480. மாண்பான யின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
ஆண்மையுள்ள காலாங்கி நாதர்பாதம் வப்பனே நான்வணங்கி சீனதேசம்  
வீண்காலம் போகாமல் குளிகைகொண்டு விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்
தாண்டவவ்போல் தேசாதி தேசமெல்லாம் சற்குருவைத் தானடுத்து வரம்பெற்றேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar